பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 37 & வல்விக்கண்ணனின் மணியான கதைகள் ஆனால் கொள்ளி முடிந்த வீட்டு'ச் சொத்து நிறைய நிறையவே கிடைத்தது அவருக்கு வாழ்க்கையில் ஒரு பற்றுதலோ, உயர்ந்த நோக்கமோ, லட்சிய ஆர்வமோ, நல்ல திட்டங்களோ அவர் பெற்றிருக்கவில்லை. பணத்தைப் பூஞ்சக்காளம் பூத்துக் கிடக்கும்படி போட்டிருந்தார். இந்த உலகத்தின் சுகங்களை தாராளமாக அனுபவிக்கமுடிவது போல், இனி என்றோ ஒரு நாள் போய்ச் சேரப்போகிற உலகத்திலே உள்ள சுகசெளகரியங்களை அனுபவிப் பதற்காக இப்பொழுதே அச்சாரம் போட்டுவைக்க வேண்டியது அவசியம் என்று அவருக்கு தோன்றியது. இத் திருப்பணிக்கு உரிய தரகர்கள் பக்த பரம்பரையினர் தான் என்று அவருக்கு பட்டது. அவர்களை வெகுவாக ஆதரிக்கத் தொடங்கினார். அதில் கட்டுப்பாடு வைத்துகொள்ளவேயில்லை அவர். அவர் வீட்டுக்குத்தான் திருச்சிற்றம்பலத்தடிகள் வந்திருந்தார். இதுவரை வந்துபோன சாமியார்களைவிட இவர் விசேஷமானவர் என்ற செய்தி ஊர்பூராவும் பரவியது. ‘சாமிகள் சோறே சாப்பிடுவதில்லை 'அடிகள் வாய் திறந்து பேசுவதே கிடையாது' என்ற செய்திகள் பரவின. அவரைக் காணக் கும்பல் கூடாமல் இருக்குமா? நடுத்தெரு நாராயணனும் போனார். இவர் கண்மூடி வியப்பராய் சென்றாரில்லை. தீரவிசாரித்து அறியவே சென்றார். கண்ணால் கண்டார். காதில் விழுந்தவைகளை கிரகித்தார். பேச்சுத் தூண்டிலை அங்குமிங்கும் வீசி உண்மைகளைப் பிடித்து இழுத்தார். - 'அடிகள் மொழு மொழு வென்று கரளாக்கட்டை மாதிரி, தக்காளிப்பழம் போல் மினுமினுப்பும் சதைப்பற்றும் பெற்று விளங்குகிறார். இவரைப் பார்த்தால் அரைவயிற்றுச சாப்பாட்டாளர் என்று சொல்லமுடியாது. ஒன்றரை வயிற்றுச் சாப்பாட்டினர் என்று வேண்டுமானால் கொள்ளலாம் என முடிவு செய்தார் அவர்.