பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 శః ಮಿನಿಗಾಹಟ್ಝg೯] அதிகாலையில் தரிசிக்க வந்த அம்பலவாண பிள்ளை, அடிகள் மறைந்து போன மாயம் உணர்ந்து திடுக்கிட்டார். வீடு முழுவதும் தேடியும் அவரைக்காணவில்லை. பரபரப்போடு துழாவினார் பிள்ளை. அடிகளார் தென்படவேயில்லை. அவருடன் வீட்டிலிருந்த ரொக்க பணமும் மறைந்து போய்விட்டது. இது பிள்ளை அவர்களுக்குப் பெருத்த அதிர்ச்சிதான். அதோடு நின்றிருந்தாலும் பரவாயில்லையே. அம்பலம்பிள்ளை வீட்டில் கூட்டிப் பெருக்கி பாத்திரம் கழுவிப் பிழைத்துக்கொண்டிருந்த லே லைக்காரி செல்லம்மாளைத் தன்னோடு கூட்டிக் கொண்டு போய் விட்டார் அடிகளார் என்கிற உண்மையும் வெளியாயிற்று. செல்வம் கண் நிறைந்த தோற்றமுடையவசீகரி: உரமேறிய உடல் பெற்றவள்; கோயில் துரண்களில் காணப்படும் சிலை மாதிரி காட்சி அளித்தாள். அவள்மீது அடிகளிள் கருணாகடாட்சம் விழுந்ததில் வியப்பு இல்லைதான். - அவ்வளவு தீவனம் தின்றால் உடலும் உள்ளமும் உணர்வுகளும் ஆளை லேசில் விட்டு வைக்குமா என்ன? சுகம்தேடும்படி துரண்டத்தானே செய்யும்! அடிகள் அருள் பெற்றவர்தான். அதில் சந்தேகமே கிடையாது. அன்னபூரணரின் அருள் மட்டுமல்ல; காமதேவனின் திருவருளும் நிரம்பப்பெற்றவர்தான். இதை அவரது செயல்களே நிரூபித்து விட்டன! என்று கெக்கலித்தார் நடுத்தெரு நாராயணன். இதை எடுத்துச்சொல்வதற்காக அவர் ராமலிங்கத்தைத் தேடி அலைந்தார். அனால் அந்த ஜோதி எங்கோ இருள் மூலையைத் தேடி முடங்கிவிட்டதால் இவர் பார்வையில் படவேயில்லை! நடுத்தெரு நாராயணன் முன்னே வந்து நின்று அவரது போதனைகளைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்வதற்கு அவருக்கு பைத்தியமா என்ன !