பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்து * j42 கோரியபோதும் அவன் கண்டிப்பாக மறுத்தான். நான் பேச்சாளன் அல்ல. எனக்குப் பிரசங்கம் பண்ணத் தெரியாது என்று உறுதியாக அறிவித்தான் அவன். ஆனால் அவர் கேட்டால்தானே! சும்மா ஒரு பத்து நிமிஷம் பேசினால் போதும். எப்படிப் பேசினால் என்ன? உங்கள் பெயரையும், நோட்டீசில் சேர்த்து விளம்பரப்படுத்தினால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக வரும். நமது விழா வெற்றிகரமாக நடைபெற வேண்டும். அதுதான் முக்கியம் என்று அந்த ஆசாமி சொல்லி விட்டார். - ஆகையினால் பாலகிருஷ்ணன் அந்தக் கூட்டத்தில் பேச வேண்டியதும் அவசியமாயிற்று. கூட்டத்துக்கு வந்த பிறகு கூட, பேசாமல் இருந்துவிட வழி கிடைக்குமா என்றுதான் பார்த்தான் அவன். ஆனால் செயலாளர் முன்ஜாக்கிரதையாகத்தான் காரியங்களைக் கவனித்தார். நிகழ்ச்சி, நிரலில் அவன் பெயரை எழுதி வைத்ததோடு இருந்து விடாமல் தலைவரையும் தூண்டியிருந்தார்.அதனால், இரண்டு பேர் பேசி முடித்த உடனே தலைவர் - அறிவித்தார். 'இப்பொழுது - பாலகிருஷ்ணன் அவர்கள் பேசுவார்கள். பாலகிருஷ்ணன் அவர்களை நான் அறிமுகப்படுத்தித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம் எதுவுமில்லை. பிரசித்தி பெற்ற எழுத்தாளரான் அவருடைய கதைகளை நீங்கள் நிறையப் படித்திருக்கிறீர்கள். இப்பொழுது அவர் அருமையான சொற்பொழிவு ஆற்றுவார். எல்லோரும் கேட்டு ரசிக்கலாம் என்று அவர் அளந்தார். அங்கு இருத்த எல்லோருக்கும் ஏமாற்றம்தான் காத்திருந்தது என்பது பாலகிருஷ்ண்னுக்கு மட்டுமே தெரியும். இருந்தாலும் இனி அவன் செயலால் ஆவது ஒன்றுமில்லை என்ற நிலை ஏற்பட்டுவ ட்ட பிறகு அவன் எப்படித் தடுத்து விட முடியும்? ஏமாற்றத்தை வழங்கினான் அவன். நான் பேச்சாளன் அல்ல. வெறும் எழுத்தாளன்