பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

甘43 哆 வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | தான். எனக்குப் பிரசங்கம் பண் ணத் தெரியாது. பிரசங்கங்களில் எனக்கு நம்பிக்கையும் கிடையாது' என்று எப்படியோ சொல்லி முடித்து விட்டு, தனது இடத்தில் உட்கார்ந்தான் அவன். அவன் செயலை நல்லதொரு தமாஷாகக் கொண்டு எல்லோரும் கைதட்டிச் சிரித்து ஆரவாரித்தார்கள். அது அவனுக்கு ஒரு தோல்விதான். இந்த நினைப்பு அவன் உள்ளத்தில் ஒருவித வெறுப்பை வளர்த்தது. தப்பு. பெரிய தவறு. நான் இங்கு வந்ததும், பேசத் துணிந்ததும் பெரிய தவறு தான்! என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அநேக தடவைகள் எதிரொலித்தது. இதே நினைப்பில் லயித்து, தன்னிலே தானே ஆகியிருந்த அவன் அவ்வேளையில் கூட மற்றொரு மகத்தான தவறைச் செய்துகொண்டிருந்தான். அதை அவன் உணர்ந்துகொள்வதற்குச் கொஞ்ச நேரம் பிடித்தது. விழா நிகழ்ச்சிகள் முடிவுற்று எல்லோரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். கூட்டம் கலைந்து, சாவகாசமாக நடப்பதற்கு வழி பிறக்கும்வரை காத்திருக்கலாமே என்ற எண்ணத்தோடு அவன் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தான். அநேகர் அவனுக்கு முன்பாகப் போனார்கள். மற்றவர்கள் தன்னைக் கேலியாகக் கவனிக்கிறார்கள் என்று அவனாகவே நினைத்துக்கொண்டதால், பாலகிருஷ்ணன் தலை நிமிர்ந்து அவர்களைக் கவனிக்காமலே உட்கார்ந்திருந்தான். தான் செய்து விட்ட தவறுகள் பற்றிய எண்ணம் வேறு அவனைப் பிடித்திருந்ததே! எனவே அவன் தனக்கு அருகாமையில் வந்தவர்களைக்கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவன் அருகே வளைகளின் ஓசை கலகலத்தபோது கூட, வாசலை நாடிப் போகிற பெண்களில் யாரோ எழுப்பிய ஒலிதான் என்றே கருதியிருந்தான். 'ஸார்! என்ற மென் குரலில் மிக அருகில் அவனுக்காகவே ஒலி