பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

售47令 ಮೀರಾಗಿಣಿ:08¤à:ಙgs:} பேசத் தொடங்கியது அதைவிட ஆச்சர்யமாகப்பட்டது. 'இவள் துணிவு உள்ளவள். துணிந்த பெண்தான் இவள்! என்று அவன் மனம் முனங்கியது. அவள் சிரித்துக்கொண்டே வணக்கம் லார் என்றாள். அவள் சிநேகிதியும் கைகூப்பி வணங்கினாள். அவன் பதில் வணக்கம் தெரிவித்தான். என்ன? என்று கேட்டு வைத்தான். தன்னை அணுகும் எல்லோரிடமும் அவன் இப்படித்தான் பேச்சை ஆரம்பிப்பது வழக்கம், எனவே பெண்களிடம் பேசுகிறோம் என்ற நினைப்பினால் சங்கோஜம் எழுவதற்கு முன்னதாகவே, பழக்க ரீதியில் அவனுடைய உதடுகள் அந்த வார்த்தையை உச்சரித்தன. இவளுக்கும் உங்கள் கையெழுத்து வேண்டுமாம் என்று அறிவித்தாள், அவனை அறிந்திருந்த யுவதி. இவள் என் சிநேகிதி, ராஜம் என்றும் சொன்னாள் அவள், 'அநாவசியமான அறிமுகம் என்று தான் அவன் நினைத்தான். ராஜம் சிறுநோட்டு ஒன்றை எடுத்து அவன் பக்கம் நீட்டினாள். அவன் அதை வாங்கி, அதில் எழுதப்பட்டிருந்த கையெழுத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டு, தன் கையெழுத்தைப் போடுவதற்கு இடம் தேடிப் பிடித்தான். பேனா வேண்டுமா? என்று உதவி புரிய முன்வந்தாள் ராஜத்தின் சிநேகிதியும் வழிகாட்டியுமாக விளங்கியவள். அவள் தந்த பேனாவை பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டதில் அவளுக்கு மகிழ்ச்சிதான். அது அவள் முகத்தில் நன்றாகப் பிரதிபலித்தது. - ஏதாவது எழுதிக் கையெழுத்து போடுங்கள், ஸார்’ என்றாள் ராஜம். - எழுத வேண்டியது அவசியமா என்ன? வெறும் கையெழுத்து மட்டும் போதாதா? என்று அவன் கேட்டான்.