பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்து భీ• 50 வேறு நினைப்பு: என் மனசில் தோன்றியதை அவளுடைய நோட்டில் நான் எழுதியிருக்கக் கூடாது. கதையிலோ, வேறு எங்கோ எழுதி வைக்க வேண்டிய எண்ணத்தை ஒரு யுவதியின் நோட்டில் எழுதி அவளிடமே கொடுத்தது தவறு என்று இப்பொழுது தான் படுகிறது! உணர்ச்சி வசப்பட்டு செய்வதைச் செய்துவிட்டு அப்புறம் அதைப் பற்றி எண்ணி எண்ணி வருந்தும் பண்பு பெற்றிருந்தான் பாலகிருஷ்ணன், ரயில் வண்டி வந்து அதில் ஏறி இடம் பிடித்த பிறகும், வீடு சேர்ந்த பின்னரும் கூட அவன் தான் செய்துவிட்ட தவறுகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணை நான் இரண்டாவது தடவையாகச் சந்திக்க நேர்ந்தது. தற்செயல் நிகழ்ச்சிதான். இனி அவ்வித மான சந்தர்ப்பம் நேரும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை’ என்று அவன் மனம் முடிவு கட்டியது. அதுவும் தவறுதான் என்பதைக் காலம் நிரூபித்தது. பாலகிருஷ்ணன் அந்த யுவதியை சந்திக்க நேர்ந்தது ஏதோ கனவில் நிகழ்ந்தது போல் மங்கி, தேயும் நினைவாக மாறிவிட்டது. சில வாரங்கள் கழிந்த பிறகு அவன் எதிர்பாராத வேளையில் அவள் திடீரென்று தோன்றினாள். அப்பொழுதும் அவன் ரயில் நிலையத்தின் பிளாட் பாரத்தில்தான் ஒரு பெஞ்சு மீது உட்கார்ந்திருந்தான். ஏதோ ஒரு புத்தகத்தில் அவன் கவனம் பதிந்திருந்தது. வணக்கம் ஸார்!’ என்ற குரல் அவனை அந்த இடத்துக்கு இழுத்து வந்தது. அவன் முன்னால் அவள் நின்றாள். திடீரென்று அங்கே அந்த யுவதி நின்றதைக் கண்டு அவன் திகைத்து விட்டான் எதிர்பாராத சந்திப்பு!" என்று முனங்கினான் அவன். நீங்கள் என்னை மறந்து விட்டீர்கள். அப்படித்தானே?