பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15? & வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் என்று கேட்டாள் அவள். 'ஏன்? என்றான் அவன். மேதைகளுக்கும் பெரிய மனிதர்களுக்கும் மறதி என்பது உடன் பிறந்த வியாதியாமே? என்று விசாரித்து விட்டு, குறும்புச் சிரிப்பு சிரித்தாள் அவள். நான் மேதையுமில்லை, பெரிய மனிதனும் இல்லையே! என்று அவன் சொன்னான். எப்படியும் இருக்கட்டும், நீங்கள் என்னைப் பற்றி تایی நினைக்காமலே இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இன்று கொஞ்ச நேரத்துக்கு முன்னால் கூட நான் உங்களைப் பற்றி நினைத்தேன் என்றாள் அவள், - அவள் அசைந்து அசைந்து, தலையை அசைத்து, சிரித்துச் சிரித்துப் பேசி நின்ற அழகு ரசிக்க வேண்டிய காட்சியாகத்தான் இருந்தது. ரசித்து மகிழாமல் இருக்க முடியுமா அவனால் ? அவனது விழிகளும், புன்னகை நெளிந்த உதடுகளும் அவளுக்கு இன்ப லாகிரி கொடுத்தன போலும்! அவள் அவன் முகத்தில் பதித்த பார்வையை மீட்டுக்கொள்ள விரும்பாதவளாய் நின்றாள். 'நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் ? நான் கம்மா கற்பனையாகச் சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா? என்று சண்டை பிடிக்க வந்தவள்போல் கேட்டாள் அவள், 'இல்லை இல்லை. நான் அப்படி எதுவும் நினைக்கவில்லை. என் மனசில் என்ன தோன்றியது என்றால்-நீங்கள் நினைத்தீர்கள்; நான் பார்வையில் பட்டு விட்டேன். ஆகையினாலே, நினைத்த உடனே தோன்றி விடுவான் சைத்தான் என்கிற வாக்கியம் உண்மை என்றாகி விட்டது!’ 'ஐயோ. ஜயோ! என்று கூ வினாள் அவள். பெரியனவாக விளங்கி, உருண்டு குவிந்த உதடுகளிலே ஒரு