பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冷 155 | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் |

  • 6m) гт fr, தயவு செய்து மன்னிக்கணும்... மன்னிக்கவேணும்:

மகிழ்வினால் முழுதலர்ந்து விகசித்த அவளுடைய முகம் திடீரென்று வாடி வதங்கிவிட்டதைப் பார்க்கவும் அவனுக்கு வருத்தம் ஏற்பட்டது. 'ஸார், என் மேலே கோபமா? கோபமா ஸ்ார்?' என்று கெஞ்சும் குரலில் அவள் கேட்டாள். என்கூட நீ காயா? ஊங், காயா? என்று வருத்தத்தோடு கேட்கும் சிறுமி போல் தான் அவளும் தோன்றினாள் அவன் நோக்கிலே. இந்த எண்ணம் அவன் உள்ளத்தில் எழவும் அவனது முகம் மலர்ந்தது. அவன் சிரித்தான். ஒளியை ஏற்றுப் பிரகாசம் பெறுகிற பளிங்குபோல அவளுடைய முகமும் மலர்ச்சி பெற்றது. ‘என் பேரில் உங்களுக்குக் கோபம் எதுவும் இல்லை. இல்லை அல்லவா? என்றாள். சட்டென்று நினைத்துக்கொண்டவளாய், "ஐயோடி நான் இன்னும் என் பெயரைச் சொல்லவில்லையே. மன்னித்துவிடுங்கள், ஸார். என் பெயர் தேவகி? என்று கூறினாள் அவள். இந்தப் பெண்ணிடம் எப்படி எரிந்து விழ முடியும்? இவளைக் கோபித்துக் கொள்வதுதான் எப்படி? ரயிலுக்கு நேரமாச்சு. சீக்கிரம் எழுதுங்களேன் என்று அவசரப்படுத்தினாள் அவள். அவன் முதல் பக்கத்தில் எழுதினான். இந்த உலகத்தில் அதிசயங்களும் நடைபெறத்தான் செய்கின்றன. ஆசிரியரிடம் அன்பளிப்பு என்ற பதத்தோடு கையெழுத்தையும் புத்தகத்தையும் எதிர்பார்க்கிறவர்கள் மிகப் பலர் உண்டு. விலை கொடுத்துப் புத்தகம் வாங்கி அதில் ஆசிரியரின் கையெழுத்தும் ஞானப் பிரகாச வரிகளும் அவசியம் இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிற ரசிகமணியும் உண்டு என்கிற உண்மை என்னைத்