பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 3. கையெழுத்து | 156 திகைக்க வைக்கிறது. ரசிகர்கள் வாழ்க-ஆசிரியர் வாழ்வதற்காக! இவ்விதம் எழுதிக் கையெழுத்திட்டு அவன் புத்தகத்தை அவளிடம் கொடுத்தான். அவன் எழுதியிருந்ததை வாசித்துப் பார்த்த தேவகிக்கு அளவில்லாத ஆனந்தம் ஏற்பட்டது. அவள் மேலும் அதிகமாக ஏதாவது வார்த்தையாடியிருப்பாள். அதற்கு வழி வைக்காமல், ரயில் வண்டி வந்துவிட்டது. அவள் விடை பெற்றுக்கொண்டு போய்ச் சேர்ந்தாள். அவளைப் பற்றியும் தன்னைப் பற்றியும் எண்ணி எண்ணிக் குழம்பாமல் இருக்க முடியுமா பாலகிருஷ்ணன் மனசினால் அது வழக்கமான தன் பண்பாட்டை ஒழுங்காகக் காப்பாற்றி வரத் தவறவில்லை. தேவகி அன்று விடை பெற்றுக் கொண்டு போனவள் மறுபடியும் மறுபடியும் தனது வாழ்க்கைப் பாதையிலே அநாவசியமாகக் குறுக்கிட மாட்டாள் என்றுதான் பாலகிருஷ்ணன் எண்ணினான். அப்படி எண்ணியது தவறு என்பதை அவனே உணர்ந்து கொண்டான். தேவகி அவனுடைய புத்தகத்தைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினாள். அவன் நன்றி தெரிவித்து பதில் அனுப்பினான். அதன் பிறகு அவள் அடிக்கடி கடிதம் எழுதிக்கொண்டே இருந்தாள். தன்னுடைய கையெழுத்தை நிறைய நிறையச் சேகரித்து வைக்கும் ஆசையோடு தான் அவள் அவ்விதம் செய்கிறாளோ என்ற சந்தேகம் அவனுக்குச் சில சமயம் ஏற்படலாயிற்று. எனினும் அவள் எழுதும் கடிதங்களுக்கெல்லாம் அவன் பதில் அனுப்பத் தவறவில்லை. - - - - - ‘என்ன இருந்தாலும் அவள் நல்ல பெண். புத்திசாலி. நல்ல ரசிகை’ என்று அவன் மனம் பாராட்டிக் கொண்டிருந்தது.