பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(QatāFF) அது கனவு அல்ல. சில சமயங்களில் எனக்கு சிறு சந்தேகம் ஏற்படுவது உண்டு, அது கனவாகத்தான் இருக்குமோ என்று. ஆனால், உடனடியாகவே எனது உள்ளம் உண்மையை உணர்த்திவிடும். அது கனவு இல்லவே இல்லை. இப்பொழுதுகூட நான் என்னுடைய கண்களை மூடிக் கொண்டு நினைத்துப் பார்த்தால், அந்தச் சூழ்நிலையைஅந்த அழகு உருவத்தை-அவள் அசைவுகளை எல்லாம் இதோ என் முன்னால் காணமுடிகிறது. கற்களின்மீது குதித்தோடிச் செல்கின்ற நீரோடையின் சலசல நாதம்போல் தொனித்த அவளுடைய சிரிப்பு, இதோ இன்னும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது. இசைக் கருவிகளிலிருந்து எழுகின்ற இன்னொலிபோல் ஒலித்த அவளுடைய பேச்சை, இப்போது கேட்டதுபோன்ற பிரமை ஏற்படுகிறது எனக்கு. இல்லை, அது கனவு இல்லைதான். அப்பொழுது மாலை வேளை, அந்தி வெயிலின் மஞ்சள் ஒளி சூழ்நிலைக்குப் பொன் முலாம் பூசிக்கொண்டிருந்தது. அதனால் மண்ணும், மரங்களின் பசிய இலைத் தொகுப்புகளும், கட்டிடங்களும் தனி ரகமானதொரு மினுமினுப்பு பெற்று விளங்கின. ஆயினும் அங்கே சோகமே அதிகம் நிலவியதாகத் தோன்றியது. ஏதோ ஒரு சோக நாடகத்துக்காக அமைக்கப்பெற்ற அரங்க நிர்மாண்ம் போல்தான் திகழ்ந்தன. அன்னத்தும். - இடிந்த கோபுரங்கள், சிதைந்த சிற்பங்கள், தகர்ந்து, உருக்குலைத்து கிடந்த கட்டிடங்கள், கருகிச் சரிந்த