பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఛ. w + - - w #67 & |ಾಣಹರಾತ್ மணியான கதைகள் சின்னங்கள்-இவை எல்லாம், வெறித்தனம் வெகுண்டு விளையாடிக் களிப்புற்றதைத் தமது மோன நிலையினாலேயே உணர்த்தும் சாட்சியங்களாக வாழ்ந்து கொண்டிருந்தன. இயற்கைச் சக்திகளின் வெறித்தன விளையாடல்களால் ஏற்பட்ட விளைவுதானோ, அல்லது கால ஓட்டத்தின் முன்னே நிலைத்து நிற்க முடியாமல் தகர்ந்து விழுந்தனவோ இவை? ஏன் இந்த நிலை ஏற்பட்டதோ தெரியவில்லைஇந்த நினைப்பு என் மனப்பரப்பிலே நெளிந்தது. "மனித இச்சைகளினால் எழுந்த நாசவேலையாக இருக்குமோ என்று நீ ஏன் எண்ணவில்லை" என யாரோ எனக்குப் பின்னால் நின்று கேள்வி கேட்டது போலிருந்தது. நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். எனது நிழல் தான் நீண்டு கிடந்தது. வெயிலின் வீச்சு அவ்விடத்தின் வெறுமையை-சூன்யத்தின் சோகத்தை-பளிச்சென எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. அங்கே காக்கை குருவிகூடக் கிடையாது. அப்புறமல்லவா மனிதன் குரல் எழுப்பக்கூடிய உருவங்களைத் தேட முயலவேண்டும்! ஆகவே, ஏதோ மனக்குறளி வேலை என்று எண்ணினேன் நான். உடனேதான் அந்தச் சிரிப்பு முதன் முதலாக - ஒலி செய்தது. பெண் ஒருத்தி குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததுபோன்ற நாதம் என் காதுகளில் பாய்ந்தது. "இந்த இடத்தில் அந்தி நேரத்தில் நின்று ரசிப்பதில் தான் எனக்கு உற்சாகம் அதிகம். ஒடி ஒடிக் களைத்துப் போய் ரத்தம் கக்கிச் சாகிற சூரியனின் செவ்வொளி, இந்த இடத்தில் அற்புதங்களைப் பிடித்துக் காட்டும். நீதான் பார்க்கப் போகிறாயே!” இப்பேச்சு ೧56faTತಕ கேட்டது எனக்கு. பேசியது