பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவற்றின் தோல்வி - *3. 162 யார் என்றுதான் புரியவில்லை. அதனால் என் உடல், பயம் எனும் உணர்ச்சியைச் சித்திரித்துக் காட்டியது. மீண்டும் அந்தச் சிரிப்பொலி உருண்டு தெறித்தது “நீ ஏன் இப்படி பயப்படுகிறாய்?" என்ற இனிய குரல் எனக்கு அருகில் ஒலித்தது. "பயம் ஏற்படாமல் காதல் உணர்ச்சியா பிறந்துவிடும் இப்படி ஒரு அனுபவம் நிகழ்கிறபோது?" நான் என் மனசில் தான் பேசிக்கொண்டேன். ஆனால், எனது நினைப்பை அப்படி அப்படியே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்த மாயாசக்தி இதைமட்டும் உணராமல் போகுமா? அது மறுபடியும் சிரித்தது. "ஒரு சமயம் ஒருவனுக்கு என்மீது காதல் ஏற்பட்டது. அளவிட முடியாத பெரும் காதல்! அதன் பலனை அவன் அனுபவிக்க நேர்ந்தது. அவன் மட்டும்தானா? இல்லையே!. என் பேரில் காதல் கொண்டதற்காக அவன் செலுத்த நேர்ந்த காணிக்கை. ஐயோ பாவம்! அவன் தனது முட்டாள்தனத்தை இறுதி நேரத்தில்தான் உணர்ந்தான்.” "உனக்கு வீண் கவலை வேண்டாம். அது மாதிரியான முட்டாள் தனத்தைச் செய்யவேண்டிய நெருக்கடி எனக்கு ஏற்படாது. உயிரோடு உலாவுகிற-வேளைக்கு ஒருவிதமாய் சிங்காரம் செய்துகொண்டு மினுக்கித் திரிகிற-மோகனவல்லி களில் ஒருத்தி பேரிலேகூட எனக்கு இதுவரை காதல் ஏற்பட்டதில்லை. கண் முன்னால் வருவதற்குத் துணியாமல் எப்படியோ மறைந்திருந்து பேசுகிற உன்மீதா எனக்குக் காதல் வந்துவிடப் போகிறது: ஹெஹே !” என்றேன். எனக்கு எவ்விதம்தான் துணிவு வந்ததோ இப்படிப் பேசுவதற்கு! எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. "ஐயே, என் மன்னபுலியே! மன்மதக் குரங்கே!” என்று பரிகசித்தது அந்தக் குரல், - -