பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 or [ಐವತ್ಗಾಣ್ರ್ಡಾಗ್ತಿತ್ತಿ! இதைக் கேட்டதும் "எனக்கு பயம்" என்ற உண்மை நிலைமையை நான் மறந்து போனேன். கோபம் வந்துவிட்டது போல் பாவித்தேன். "அட, கோபம்தானா!" என்ற குரல் கேட்டது. எனக்குக் "கிச்சுகிச்சு” மூட்டுவது போல் மர்மமான விரல்கள் என்பtது ஊர்வதாகத் தோன்றியது. நான் துள்ளி எழுந்தேன். நல்ல வேளை உயரமான ஒரு கல் மீது உட்கார்ந்திருந்த நான், முகம் தரையிலே இடிக்கும் படியாக, விழாமல் இருந்தேனே! இதற்காக மட்டும்தான் நான் சந்தோஷப்பட்டேன் என்பதில்லை. என்னோடு பேசி நின்றது காற்று-கறுப்புஆவி-பேய்-பிசாசு என்கிற எந்தப் பெயருக்கு உட்படுவதானாலும் சரிதான், அது பயம் காட்டிப் பிழைக்கிற இனத்தைச் சேர்ந்தது அல்ல; சிரித்து விளையாடுவதில் பிரியம் உடையது என்று புரிந்துகொள்ள முடிந்தது என்னால், இந்த ஞானம்தான் எனக்கு அதிகமான மகிழ்வு தந்தது. இந்த எண்ணத்தில் லயித்துவிட்ட நான், சுற்றுப்புறத்தை ஆராய்ந்து ரசிக்க மறந்துபோனேன். ஒரு கணம்தான் "இப்ப பாரு நன்றாகக் கவனி!” என்ற குரல், எனது ரசனை உணர்வை விழிப்புறச் செய்தது.கவனித்தேன். அந்த அந்தி நேரக் காட்சியிலே விசேஷமான அழகோடு-ஒளி மயமான கவர்ச்சியோடு-சோக முலாமும் குழம்பிக் கிடந்தது. - சூழ்நிலையில் புதுமை புகுத்திய சூரிய வட்டத்தையே பார்த்து நின்ற எனது கண்கள் கூசின. திடீரென்று என்னை ஏதோ எங்கோ எடுத்துச் சென்று திசை தெரியாத இடத்திலே விட்டுவிட்டது போல் தோன்றியது. நான் அதே இடத்தில் தான் நிற்பதாக ஒரு உணர்வும் உள்ளுற நிலைபெற்றிருந்தது. எனினும் நான் அப்பொழுது அந்த