பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 ; |வல்லிக்கண்ணனின் மணியான ಙ] களத்திலே வாழ்வின் நடிகர்களால் அனுபவிக்கப்பட்ட காவிய நாடகம் எதுவோ எனக்காக என் கண் முன்னால் உயிர் பெற்றுக் கொண்டிருந்ததாக ஒரு பிரமை எனக்கு. அவள் அவனைக் கண்டாள். அடக்க முடியாத ஆசை கொண்டாள். அவன் உறவுக்காகத் தவித்து ஏங்கி நின்றாள். அவள் அழகிகளிடையே பேரழகி அழகு அம்சங்களை வசீகரமாய் மிளிரச் செய்யும் ஆற்றல் பெற்ற அலங்காரி. அகங்காரி, ஆணவக்காரி. புத்தம் புதிய வாள்போல் பிரகாசித்தாள் அவள். வைர ஊசிகள் போல மின்னின, கூரிய பார்வை வீசிய அவள் கண்கள். கனலும் நெருப்புத் துண்டுகள் போல் ஜொலித்தன அவள் உதடுகள், அவள் உணர்ச்சி மிகுந்தவள், உள்ளத்து உறுதியிலே உருக்கின் திடத்தன்மை படிந்து விடும் சமயம் நேருகிறபோது. - அவன் அவளை அலட்சியம் செய்தான். அவள் கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாள். கெஞ்சினாள். காதல் பிச்சை வேண்டி நின்றாள். தான் பிச்சை இடுவதற்கு அருகதையற்ற பாத்திரம் அவள் என்று பழித்து உரைத்து விட்டான் அவன். - அவள் வெகுண்டு கோபித்தாள். எள்ளி நகையாடினான் அவன். வெஞ்சினம் கொண்டு உரிய நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தாள் அவ்வஞ்சகி. அவன் புகழைத் காதலித்தான். உயர் கலைகளைக் காதலித்தான். உண்மையை, நேர்மையை, நியாயத்தை எல்லாம் காதலித்தான். அழகைக் காதலித்தான். ஆனால், அகங்காரியான அவளை அவன் காதலிக்கவில்லை. அவன் தனது நகரைச் சிறப்புறுத்தினான். கலைச் செல்வங்கள் மலிந்த இடங்களை நிர்மாணித்தான். அழகு கொலுவிருக்கும் கூடங்கள் பலப்பல அமைத்தான். நாட்டின்