பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j67 & வல்லிக்கன்னனின்ன கதைகள், காதல் அவன் அறிவைத் தீய்த்தது; அவனை வெறியனாக்கியது. அதன் பலன் அழகு நகர் மீது விடிந்தது. அந்நகர் அதிபன் சற்றும் எதிர்பாராதிருந்த வேளையிலே காதல் வெறியனின் படை திமு திமுவென்று பாய்ந்து தாக்கியது. எதிர்த்துக் சமாளிக்க முடியாமல் தோல்வி கண்டான் தீங்கு எதுவும் எண்ணியிராத மன்னன். வெறியனின் வாளுக்குப் பலியானான் அவன். நாசவெறி நர்த்தனமிட்டது அந்நகரம் பூராவும். மனித உருவில் விலங்குகளும் அரக்கர்களும் அழிவு வேலைகளைத் தீவிரமாகச் செய்தார்கள். போர்க் கருவிகளுடன் தீயும் சேர்ந்து கொண்டது. பற்றி எரியக்கூடிய பொருள்களுக் கெல்லாம் தீ வைக்கும் படிக் கட்டளையிட்டான் அவ்வெறியன். - . தனது வீர விளையாடல்களைக் கண்டு மகிழ்ந்து நின்றான் அவன். தன்னிடம் காதல் கொண்டு பித்துற்றவனின் வெறித்தன வேலைகளின் விளைவுகளைக் கண்ணால் கண்டு களித்து நின்றாள் அவள். அவள் அழகை அள்ளி விழுங்கும் பார்வையோடு, 'அன்பே' என்று உணர்ச்சிகரமாக அழைத்தபடி அவன் அழகியை நெருங்கி, ஆர்வத்தோடு கையைப் பற்றினான். நாய் ஒன்று தன் கையை நக்கிவிட்டால், முகம் சுளிப்பதுபோல் அவள் வெறுப்பு காட்டினாள் கையை உதறிவிடுத்தபடி 'சீ' என்று சிடுசிடுத்தாள். மிடுக்குடன் நின்றான். - 'அன்பே, என் ஆசை ராணியே! எனது வெற்றி உனக்குத் திருப்தி தரவில்லையா? இன்னும் நான் என்ன செய்ய வேண்டும், சொல்லு-என்று கொஞ்சலும், கெஞ்சலுமாகப் பேசினான் அவன். 'நீ என்னைத் தொந்தரவு செய்யாமல் போய்விடு. அதுதான் நீ எனக்குச் செய்யக்கூடிய பேருதவியாகும் என்று