பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றியின் தோல்வி & 468 இரக்கமில்லாமல் தெரிவித்தாள் அழகி. 'அப்படியானால் உன் உறுதிமொழி ' என்று பதட்டமாய் கேட்டான் அவன். - அவள் சிரித்தாள். ‘என் காதல்..' என்று முனகினான் அவன். 'நிறைவேறாத-நிறைவேற முடியாத-காதல் தான். அதுவும் தீயோடு தீயாகிக் கருகட்டும்! என்று சொன்னாள் இதயத்தில் ஈரம் ஓர் சிறிதும் பெற்றிராத அழகி. வெறிகொண்டு செயல் புரிந்த வீரன், தன்னை வஞ்சித்த பெண்ணுக்கு சிறு தீங்கும் விளைவிக்க எண்ணினானில்லை. தான் காதலித்த அழகுக்குக் கேடு பயக்க விரும்பாமல் தன்னைத்தானே அழித்துக் கொண்டான் அவன். காலத்தின் புழுதிப் படலம் அனைத்தையும் மறைத்து விட்டதாகத் தோன்றியது. என் உடலில் சிறு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் கீழே விழுந்துவிடாமல் சமாளித்துக்கொண்டு உட்கார்ந்தேன். மேல் வானம் ஒரே சிவப்பு மயமாகித் தகதகவென்று பிரகாசித்தது. சூரியன் அடிவானத்தினுள் புகுந்துவிட்டது. விண்ணும் மண்ணும் முத்தமிட்டுக் கிடந்த வளைவிலே பொன் மயமாய், எழில் நெருப்பாய், ஒளி சிரித்து மினுக்கியது. கண்ணைக் கூசவைக்கும் கூரிய ஒளிச் சூலம் போல் கதிரவனின் கடைசிக் கிரணம் ஒன்று சற்றே தேங்கிப் பின்தேய்ந்தது. அந்த ஒற்றைக்கதிரே பெண் உருவம் பெற்றுக் குதித்து வந்ததுபோல என் முன்னால் ஒரு அழகி தோன்றினாள். காலத்தால் மூவாத கட்டரசி அவள். பருவங்களால் பாதிக்கப்படாத எழில் மலர் அவள். அவள் பார்வையிலே, செயல்களிலே, சிரிப்பதிலே, அவள் அழகிலே மண்ணுலக நியதிகளோடு விண்ணுலக மாண்புகளும் கலந்து கிடந்தன.