பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

469 & | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | நான் கண்டு வியந்த-காலக் களத்திலே என்றோ நடிக்கப் பெற்று முடிந்து போன கொடிய சோக நாடகத்தின் நாயகி இவள்தான் என்பதை உணர்வது சிரமமாக இருக்கவில்லை, 'அம்மா தாயே! நீ நன்றாக இருப்பாய்! நான் புத்தி கெட்டதனமாக இந்த இடத்தைப் பார்க்க வந்துவிட்டேன். வந்ததுதான் வந்தேனே, பார்த்த உடனேயே வந்த வழியில் மீண்டும் நடந்திருக்கக் கூடாதா? அதையும் செய்யத் தவறிவிட்டேன். இந்தச் சூழ்நிலையின் சோகத்திலே தூங்கிய சொக்கழகு காந்தக் கவர்ச்சி பெற்று, என்னைத் தங்கிவிடச் செய்தது. அதனாலும் பாதகமில்லை. உனது அபூர்வமான சக்தியை நான் உணர்ந்துகொண்டேன். அதை உணரச் செய்ததற்காக உன்னை நான் கும்பிடுகிறேன். உனது மகத்தான வெற்றியின் அழியாத சின்னங்களாக விளங்குகின்றன. இச்சிதைவுகள். இவை புரிந்து வருகிற சகாயத்தைவிட, நான் உனது புகழுக்கு என்ன உதவி செய்ய இயலும்? சின்ன மானிடச் சாதியில் வந்த அப்பாவிகளில் ஒரு அப்பாவி நான்.' z இவற்றையும் இன்னும் பல எண்ணங்களையும்-அவள் முன் பேச விரும்பினேன். பேசிவிட்டு நைலாக நழுவிவிட வேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டாயிற்று. என் ஆசையையும்-எனது உணர்வுத் துடிப்புகள், மன ஓட்டங்கள் அனைத்தையுமேதான்-அவள் கிரகித்துக் கொண்டாள். ஆகவே, சிரித்தாள். அதே சிரிப்புதான். ஆனால், அந்தி மயங்கி வந்த அவ் வேளையில்-நான் கண்டு உணர்ந்த அனுபவங்களுக்கும் பிறகு-அந்தச் சிரிப்பு என்னை என்னென்னவோ பண்ணியது. நான் நெடு மூச்சு உயிர்த்தேன். தீ நிறத்துப் பேரழகி சிரித்தபடி பேசினாள்: "எனக்கு வெற்றி என்று தானே நீ குறிப்பிட விரும்பினாய்? நான்கூட ஆதியில் அப்படித்தான் எண்ணினேன். எனக்கு வெற்றி