பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - - е * ه 171 & | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | தோன்றினால்-நான் அவர்களையும் காலத்தின் கழிந்து போன கட்டத்துக்கு இட்டுச் சென்று வேடிக்கை காட்டுவேன். இது என்றோ ஒருநாள் மிக அபூர்வமாக நடக்கிற விஷயம்.” - மோகனமான அந்தப் பேரழகு என் கண்களைப் பறித்துவிடும் தன்மையில் இருந்தது. அவள் கண்கள் அக்கினிக் கங்குகள் போல் ஜொலித்தன. "நான் இந்த இடத்தை மறக்க முடியாது. நீயும் என்னை மறக்க முடியாது.” அவ்வளவுதான் சொன்னாள் அவள் வந்ததுபோல் மறைந்து போனாள், சட்டென்று அவள் சிரிப்பு என் காதருகே ஒலித்தது. பின் தேய்ந்து தேய்ந்து காற்றோடு கலந்தது. எனது பார்வை மேல் வானத்தில் பதிந்தது. அங்கே காலக் கன்னியின் களங்கமிலாச் சிரிப்புபோல் கிடந்தது இளம்பிறை. அது ஆசை அடங்கப் பெறாத அழகியின் ஆத்ம வேதனையை எண்ணிச் சிரித்துக் கொண்டிருந்ததா ? அல்லது என்னைக் கண்டுதான் எள்ளி நகைத்ததோ! எனக்குத் தெரியாது. எனக்கு எதுவுமே புரியவில்லை. புராதனச் சூழ்நிலையில் நின்ற என்னுடைய சரித்திரத் துணுக்கு ஒன்று பிறப்பித்து விட்ட மாயலிலைதான் அதுவா? அல்லது, இறந்த காலத்தினூடே யாத்திரை' என்று சில சிந்தனைஜாம்பவான்கள் கூறி வந்துள்ள விஷயம் எனக்கும் சித்தித்ததோ?. தெரியாது, தெரியாது. ஆனால், நான் நிச்சயமாகச் சொல்லக் கூடியது இதுதான்-அது கனவு அல்ல. - ஆமாம்; அது கனவு இல்லவே இல்லை.