பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( விபரீத வி ளையாட்டு சிாய்வு நாற்காலியில் சும்மா சோம்பிக் கிடந்த கைலாசம் பிள்ளையின் பார்வை தோட்டத்துச் செடிகளின் மீது படிந்திருந்தது. குறிப்பாக எதையும் நோக்காமல் அர்த்தமற்ற பார்வையோடு நின்ற கண்களில் திடீரென்று ஒரு மிரட்சி தோன்றியது. அவர் உள்ளத்தில் ஏற்பட்ட சிலிர்ப்பின் காரணமாக உடலில் நடுக்கம் பிறந்தது. நிமிர்ந்து உட்கார்ந்த பிள்ளை தன் கண்களைத் துடைத்துக் கொண்டு நன்றாக உற்றுக் கவனித்தார். சந்தேகம் இல்லை; அங்கே ஒரு செடியின் அருகில் நின்றது பூனைதான். கறுப்பு நிறப் பூனை. அந்த பூனையும் தம்மையே நோக்குவதாக உணர்ந்தார், பிள்ளை. சோகை பிடித்த மஞ்சள் நிற வட்டத்தின் நடுவில் கறுப்பாக ஒரு கோடு கீறியது போன்ற விழி-அதுதான் அந்தப் பூனையின் கண். இருள் பரவாத அந்த அந்தி வேளையில் அதன் கண்கள் சலனமற்ற-ஒளி அற்ற-வெறும் அவயவங்களாக நிலைத்து நிற்பது போல் தான் அவருக்குத் தோன்றியது. - அவர் உள்ளத்தில் இனம் புரிந்து கொள்ள முடியாத ஒரு உதைப்பு. அந்த உணர்ச்சி உந்திய நடுக்கம் தேகத்திலே. அவர் கண்களை மூடிமூடித் திறந்தார். கை விரல்களினால் கசக்கி விட்டுக் கூர்ந்து நோக்கினார். அந்தப் பூனை அதே இடத்தில் அதே நிலையில், அவரை அலட்சியமாகவும்பழிக்கின்ற பாவனையிலும்-குற்றம் சாட்டுகிற தன்மையிலும் பார்வை எறிந்து நிற்பதாகக் கண்டார். கூச்சலிட வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை அவருக்கு. பிறகு அவர் கண்களை மூடித் திறந்து பார்த்தபொழுது -