பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபரீத സ്പെ & 174 அங்கே பூனை இல்லை. புரண்டு பாய்ந்த அவருடைய விழிகளின் வீச்சிலும் அதன் உருவமோ நிழலோ தென்படவில்லை. என்ன மாமா, அங்கே என்ன இருக்குது? எதை அப்படி ஒரே பார்வையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்ற கேள்வி அவரைத் திடுக்கிட வைத்தது. அப்படிக் கேட்டவன் அவருடைய மருமகன்-அக்காள் மகன்-சிவசைலம்தான் என்பது குரலிலிருந்தே புரிந்து விடடது. என்றாலும், தனக்குப் பின்னால் திடீரென்று பேச்சொலி பிறக்கவும் அவருக்கு சிறு அதிர்ச்சி ஏற்பட்டு விட்டது. திரும்பிப் பார்த்தார் பிள்ளை, எதையோ கண்டு பயந்து போனார்: என்ற களை அந்த முகத்திலே உறைந்து கிடந்தது. அங்கே ஏதாவது பாம்பு கீம்பு வந்துதோ என்று பயந்துவிட்டேன். நீங்க ஒரே குறிப்பாக, என்று இழுத்தான் சிவசைலம். 'இஹிஹறி. ஒண்னுமில்ல' என்று வார்த்தைகளை மென்று விழுங்கினார் பிள்ளை, பிற்கு கொஞ்ச நேரம் தயக்கத்திலும் யோசனையிலும் தத்தளித்து ஒருவாறு சமாளித்துக்கொண்டு பேசினார், ஆமா, சைலு! அந்தப் பூனையை என்ன பண்ணினாங்க நம்ம ஆளுங்க ? குழிதோண்டி அதைப் புதைக்கும்படி சொன்னேனே 'எந்தப் பூனை' ஒன்றும் தெரியாத சாது மாதிரிக் கேட்டான் சிவசைலம், இங்க அலைஞ்சு திரிஞ்சு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்ததே கறுப்புப் பூனை. வெள்ளிக்கிழமை சாயங்காலம் நீங்கள் தடியை வீசிக் கொன்றீர்களே, அது தானே? என்று விசாரித்தான்.அவன். அப்பொழுது அவர் முகத்தில் படர்ந்த வேதனையை உள்ளத்தால் ரசித்தவனாய் அவன் சொன்னான்: அதுதான் செத்துப் போச்சுதே. நீங்க சொன்னபடியே மாடசாமி குழி