பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னேக்கு_) * 16 அவள் உடைத்த சாமான்களுக்கு ஒர் அளவு கிடையாது. கிழித்த புத்தகங்களுக்கு ஒரு கணக்குக் கிடையாது. குழந்தைகள் என்றால் இவ்வாறெல்லாம் செயல் புரியத்தான் செய்யும் என்று பெற்றோர்கள் ஒரளவுக்குப் பொறுத்துக் கொள்வதும் இயல்புதான். மீனு பெரியவர்கள் பொறுமையை மிகுதியாகச் சோதிக்கத் தொடங்கவும், அவர்கள் திட்டமிட்டார்கள்அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டியதுதான் என்று. அதன்படி மீனுவை மழலையர் பள்ளி ஒன்றில் சேர்த்தார்கள். „ . * 3, “ ، خصميم . - - - ?لاو ہے، یمیہ ایسی , م م மீனு வீட்டில் எதுவுமே படிக்க மாட்டேன் என்கிறது. வாய் அதிகம் பேசுகிறது. வேற்றிடத்தில், பல குழந்தைகளோடு சேர்ந்து பழகி விளையாடினால் சரியாகி விடும், என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள். ஆகவே, மீனுக்குட்டி பள்ளிக்கூடம் போகத் தொடங்கினாள். புதுக்கவுன், புது ரிப்பன், புதிய பை, பலகை, புத்தகம், சிரத்தையான சிங்காரிப்பு-கண் குளிர க் காண்பதற்கு ஏற்ற பொம்மை போல் காட்சி அளித்தாள் அவள். அவள் பள்ளிக்கூடம் போகிற அழகைப் பார்த்து ரசித்து மெச்சாமல் இருப்பார்களா பெரியவர்கள்? மெச்சினார்கள். இந்தப் புது அனுபவம் கூட மீனுவுக்கு ஒரு விளையாட்டு மாதிரித்தான் தோன்றியது. அவளும் அதில் முழு மனசுடன் ஈடுபட்டாள். பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் மீனுக்குட்டி பொரிந்து தள்ளுவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. வாய் ஓயாமல் பேசி மகிழ்ந்தாள் அவள். பெரியவர்களும் கேட்டு ஆனந்தம் கொண்டார்கள். பெருமைப்பட்டார்கள். ஒருநாள் மீனு அதிகமாகச் சிரித்துக் கொண்டே வந்தாள்.