பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபரீத விளையாட்டு! & 182 எறிந்தது, பூனையை நோக்கி, அப்பொழுது சாவகாசமாகப் பம்மி நின்று இன்னொரு பூனை போன சுவட்டைத் தேடிக்கொண்டிருந்தது கறுப்புப் பூனை. அதன் மீது தடி விழுந்தது. ஹேய், தொலைஞ்சே நீ! என்று உறுமினார் பிள்ளை. அந்த உறுமல், உள்ளே இருந்த சிவசைலத்தை இழுத்து வந்தது. தடி விழுந்த வேகத்தையும், பூனை தீனமாக குரலை இழைய விட்டபடி செடிகளின் மறைவில் நழுவுவதையும் அவன் பார்வை கிரகித்தது கைலாசம் பிள்ளை, பிடித்து வைத்த பின்னையார் மாதிரி, கொஞ்ச நேரம் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தார். பிறகு எழுந்து, வீட்டின் பின் பக்கமிருந்த கிணற்றடிக்குச் சென்றார். ஏதோ கோட்டையைப் பிடிக்கத் திட்டமிடுவது போல், பிர மாத யோசனையில் மூழ்கியிருந்த சிவ சைலம் பூனையைத் தேடிப் போனான். பிள்ளை சாந்தம் அடைந்த பிறகுதான் அவன் அவரிடம் பேச்சு கொடுக்க முன் வந்தான். அவரைப் புகழ்வதுபோல் ஆரம்பித்தான். 'ஒரு அறையின்னாலும் சரியான அறை மாமா அது. தடி விழுந்த வேகத்திலே பூனை உசிரும் ஒடியிருக்குது என்றால் சும்மாதானா ! ஹெஹ, வயித்துலே மட்டும் பட்டிருந்தாலாவது பூனை பிழைச்சிருக்கும். இந்த அடி பாருங்க அதன் மூக்கு மேலே, கண்ணுலே மண்டையிலே எல்லாம் பட்டிருக்குது. அந்த அடி ஒரு ஆள் மூஞ்சி மேலே பட்டிருந்தால் அந்த ஆளே அவுட் ஆகியிருப்பான்னு சொன்னால், பூனை எந்த மூலைக்கு? அதுக்கு இடி விழுந்த மாதிரி ஆகியிருக்கும். கதிகலங்கிப்போயி, லேசாக நகர்ந்திருக்கு சுருண்டு விழுந்து செத்துப் போச்சு, பாவம் ! என்றான். அவசரம் எதுவுமில்லாமல், மிகவும் நிதானமாக, ஒவ்வொரு வார்த்தையையும் சுவைத்து ரசித்து எடுத்துத் தருகிறவன் மாதிரிப் பேசினான் அவன்.