பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபரீத விளையாட்டு • 184 விஷயம் அத்துடன் முடிவடைந்து போகும் என்று தான் கைலாசம் பிள்ளை எண்ணினார். ஆனால் அவர் மனம் வேறுவிதமாக எண்ணிவிட்டது! சதா பூனைஜெபம் பண்ணிக்கொண்டிருந்தது அது. ஐயோ, பூனை செத்துப் போச் சுதே... அநியாயமாக அதைச் சாகடிச்சுப் போட்டேனே. பூனையைக் கொன்றது பெரிய பாபம் அல்லவா?’ என்ற தன்மையில் மனம் புலம்பிக் கொண்டிருந்தது. அதற்குத் தூபம் போட்டு மந்திர உச்சாடனம் செய்கிற தோரனையயில் சிவசைலம் அடிக்கடி பூனையின் மரணம் பற்றியும், அதற்கு ஏதுவாக அமைந்த பிள்ளை அவர்களின் கை வலிமை பற்றியும் பிரஸ்தாபித்து வந்தான். மனஅமைதி இழந்து தவித்த பெரியவருக்கு மேலும் வேதனை அளிக்க விரும்பியதுபோல் வந்து போயிற்று பூனையின் உருவம். அந்தி வேளையில் காட்சி அளித்தது வெறும் மயக்குத் தோற்றம் -சதா பூனையின் நினைவாகவே இருக்கும் மனம் சுட்டிக்காட்டிய வெறும் மாயை' என்றுதான் கைலாசம் பிள்ளை முதலில் எண்ணினார். அது சரியான கணிப்பு அல்ல என்பது தெளிவாகி விட்டது. - : அன்று இரவு ஏழரை மணிக்கு , அடுப்பங்கரையில் பிள்ளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருடைய பார்வை தற்செயலாக, அங்கிருந்த ஜன்னல் மீது பாய்ந்தது. உடனே அவர் உள்ளத்தில் கலக்கம் குதித்தது. ஜன்னலில் ஒரு பூனை-கறுப்பு நிறப்பூனை- அங்கங்கே வெள்ளைத் திட்டுகள் படிந்த உடல், மயிரடர்ந்த வால், அதே, பூனைதான். கவலையற்ற தன்மையில் வீற்றிருப்பதை அவர் கண்டார். அந்தப் பூனையும் அவரைப் பார்த்தது. அதனுடைய கண்கள்! சாதாரணப் பூனைக் கண்களா அவை ஒளி கனலும் கங்குகள் போல் அல்லவா மினுமினுத்தன: அவை எறிந்த பார்வை பிள்ளையைச் சுடுவது போலிருந்தது. கையில் எடுத்து சாதத்தை அப்படியே வைத்துக்கொண்டு பெரிய பிள்ளை ஜன்னலின் பக்கமே