பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

甘85令 வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் திருதிருவென்று முழித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கவனித்த மூக்கையா, அங்கே என்னத்தை முதலாளி அப்படிப் பார்க்கிறீங்க என்று கேட்டான்? அவர் திடுக்கிட்டுத் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தார் அந்த ஜன்னலில் என்று மெதுவாக ஆரம்பித்தார் ஜன்னலைப் பார்த்துக் கொண்டே அங்கே ஒண்னும் இல்லையே முதலாளி ஒன்றையும் காணலியே என்றான். பிள்ளையின் பார்வை மீண்டும் அந்தப் பக்கம் திரும்பியபோது ஜன்னல் வெறும் ஜன்னலாகத்தான் காட்சி தந்தது. அவரை அறியாமலே அவர் தேகம் நடுங்கிக்கொண்டது. அங்கே பூனை இருந்தது மாதிரித் தெரிஞ்சுது என்றார் அவர், - பூனையா? இல்லையே; என் கண்ணிலே படலியே முதலாளி. அங்கே பூனை உட்கார்ந்திருந்தால் என் பார்வையிலே படாமலா போயிருக்கும் ஆம் ரொம்ப ஆச்சரியமாக இருக்குதே? என்றான் மூக்கையா. கைலாசம் பிள்ளை ஒன்றும் பேசவில்லை. அந்த ஜன்னலையே வெறித்து நோக்கியவாறு இருந்தார். அவருக்குச் சாப்பாடு இறங்கவில்லை. சொன்னவங்க சரியாகத்தான் சொல்லியிருக்கிறாங்க, முதலாளி. கண்களே மனிதனுக்குப் பரம விரோதி என்றாங்க பாருங்க, அது நூற்றிலே ஒரு. இல்லை, அயிரத்திலே. இல்லை, பத்தாயிரத்திலே. இல்லை, லட்சத்திலே ஒரு வார்த்தை, மகாப் பெரிய உண்மை என்று அடுக்கினான் மூக்கையா. 'வாயை மூடுடா முட்டாள் என்று சீறினார் பெரியவர். தன் முன்னாலிருந்த சோற்றுத்தட்டை ஆத்திரத்தோடு தள்ளிவிட்டு எழுந்து போனார். கை கழுவி விட்டு அதே வேகத்தோடு வெளியே சென்றார்.