பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபரீத விளையாட்டு, ※ 售86 'முதலாளிக்கு மூக்குக்கு மேலே கோபம் வந்தாலும் மூக்கையா பிள்ளைக்குக் கவலை கிடையாதுங்கிறேன். ஹேஹே! என்று வக்கணை கொழித்த சமையல்காரன் லேசாக முனகினான். பாட்டுத்தான் அது உம் கண் உம்மை ஏமாற்றினால், எம் மேல் கோபம் உன்டாவதேன்? பிறகு தனது சாமர்த்தியத்தை எண்ணித் தானாகவே சிரித்துக்கொண்டான். 5ìñມໍມຸ கைலாசம் பிள்ளையை மறந்து விட்டது, சிடுசிடுப்பு அவருடன் தீவிர நட்பு கொண்டாடியது. யார் என்ன கேட்டாலும் எரிந்து விழுந்தார் அவர். சரியாகச் சாப்பிட முடியவில்லை அவரால். நல்ல துரக்கமும் கிடையாது. ஏதோ ஒரு வேதனை ஓயாது அவர் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருந்ததாகப் புலப்பட்டது. "அவருடைய மூளையிலே குட்டிச் சாத்தான் புகுந்துகிட்டு அவரைப் பாடாய் படுத்திப் பம்பரமாக ஆட்டிவைக் குது!’ என்று சிவ சைலம் சொல்லத் தொடங்கினான். குறளி செய்கிற வேலை இதெல்லாம் என்று சிரித்தான் மூக்கையா. "சரியான பூனைப் பைத்தியம் பிடிச்சிருக்கு நம்ம ஐயாவுக்கு வெள்ளிக்கிழமையிலேயிருந்து அங்கே பூனை, இங்கே பூனை என்று எங்கே பார்த்தாலும் பூனையைத்தான் பார்க்கிறாரு இதே நிலைமையில் போனால் அப்புறம் முதலாளியை குற்றாலத்துக்கு அழைத்துக்கொண்டு போக வேண்டியதுதான். அருவியிலே குளிரக் குளிர ஸ்நானம் பண்ணினால், மூளைக்கொதிப்பு தீர்ந்து போகுமாமில்லே? என்றும் சொன்னான் அவன். கைலாசம் பிள்ளைக்குக் கூட, அந்தச் சந்தேகம் ஏற்பட்டிருந்தது. ைபத்தியம் பிடித்துவிட்டதா ? பிடித்துக்கெண்டிருக்கிறதா? அல்லது இனிமேல் தான் பிடிக்குமா? என்று குழம்பியது அவர் மனம். பின்னே