பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 7 & வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் 'மீனுக்குட்டிக்கு என்ன இன்று சிரிப் பாணி அள்ளிக்கிட்டுப் போகுது! என்ன விஷயம் ? என்று கேட்டாள் அம்மா. 'பள்ளிக்கூடத்திலே பத்மான்னு ஒரு பெண் இருக்கிறா. அவளை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு, என்றாள் மீனு, 'அப்படியா? 'அவளுக்கு என்னவெல்லாமோ தெரியுது அம்மா. இன்னிக்கு அவள் ராணி என்கிற பெண்ணுக்குச் சரியானபடி பாடம் கற்றுக் கொடுத்தாள். ராணி ரொம்பப் பிரவுடு தனக்குத்தான் எல்லாம் தெரியும்னு பெருமை பேசுவாள். பத்மா அவகிட்டே சொன்னாள்-நான் கண்ணை மூடிக்கிட்டு ஒரு காரியம் செய்வேன். நீ கண்ணைத் திறந்தபடி அதைச் செய்யனும், செய்து காட்டுவியா என்றாள். ஒ, அது என்ன பிரமாகதம் என்று ராணி சொன்னாள். உடனே பத்மா என்ன செய்தாள்? தன் ரெண்டு கண்ணையும் மூடிக்கிட்டு மண்ணை எடுத்து கண்மீது போட்டுக்கொண்டாள். அப்புறம் அதைத் துடைத்துவிட்டு, கண்ணைத் திறந்தாள். சரிடீ ராணி, இப்ப நீ இதைச் செய்து காட்டு என்றாள். அது எப்படி முடியும்னு ராணி சொல்லவும், பத்மா சண்டை பிடித்தாள். ராணி வாயடி அடித்தாள். பத்மா அவளைப் பிடிச்சு அவள் மூஞ்சியிலே மண்ணை அள்ளிப் போட்டு. இப்ப நினைச்சாலும் சிரிப்புச் சிரிப்பா வருது. ராணியோட கண்ணு, மூக்கு, வாய் எல்லாம் மண்ணு. அவ துர்துன்னு துப்பியபடி கண்ணைக் கசக்கிக்கொண்டு. மேலும் சொல்ல முடியாதபடி மீனுக்குட்டிக்குச் சிரிப்புப் பொங்கியது. கைகொட்டிச் சிரித்தாள். ஐயோ, ஐயோ!' என்றாள் அம்மா. அடப்பாவமே! இப்படிச் செய்யலாமோ? என்றாள் பாட்டி 'டீச்சருக்குத் தெரியாதா? டீச்சர்கிட்டே யாரும் சொல்லலியா? என்று அப்பா கேட்டார்.