பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 <> |வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்) கோபிச்சாங்க இனிமேல் இப்படி எல்லாம் செய்யப் படாதுன்னு அதட்டினாங்க ரொம்ப நேரம் நிற்க வச்சாங்க, என்றாள் மீனு. - பிறகு அப்பாவிடம் அம்மா சொன்னாள்: இந்த பத்மா என்கிற பெண் ரொம்பவும் மோசமானதாக இருக்கும் போல் தோணுது. அது மற்றக் குழந்தைகளைக் கூடக் கெடுத்து விடுமே. டீச்சரைக் கண்டு இதைப் பற்றி பேசினால் நல்லதுன்னு நினைக்கிறேன். நம்ம மீனுவைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அல்லவா? ஆமாம். அதுதான் நல்லது, என்றார். அப்பா. எனினும், அம்மா தன் எண்ணத்தை உடனடியாகச் செயலாக்க இயலவில்லை. எத்தனையோ அலுவல்கள் அவளுக்கு நாளைக்குப் போகலாம், நாளைக்குப் போகலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தாள். மீனுக்குட்டி பத்மா புராணத்தைப் பேசுவதை விட்டு விடவில்லை. பத்மா அதைச் செய்தாள். இப்படி இப்படி நடந்து கொண்டாள். சுசீயின் தலைப் பின்னலைக் கத்தரித்து விட்டாள். தேவகியின் நோட்டிலே கிறுக்கி வைத்தாள். சாவித்திரியின் புத்தகத்தை எடுத்து மறைத்து வைத்துவிட்டு, அவளை அழப்பண்ணினாள்-இப்படிப் பல குறும்புத் தனங்கள் பற்றி வியந்து பேசினாள். பத்மா என்னதான் செய்வாள், அல்லது செய்யமாட்டாள் என்றே சொல்ல முடியாது. அவள் துடுக்குத்தனம் பெற்ற துணிச்சல்காரி, இதர சிறுமிகளின் வியப்புக்குரிய விளையாட்டுப் பிள்ளை, விஷமங்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவள் என்று தான் எண்ண முடிந்தது மீனுவின் பெற்றோர்களால், மீனுவின் பள்ளிக்குச் சென்று டீச்சரிடம் சொல்வதற்கு அவர்களுக்குப் பொழுது கிட்டவேயில்லை. கண்டிப்பாக ஒருநாள் போய்விடவேண்டும் என்று நினைப்பதையும் நிறுத்த வில்லை அவர்கள்.