பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎 21 & ಮಿಖಣಿತಣ್ಣTಾಗಿ மணியான கதைகள் | பள்ளித் தலைவி காந்திமதி அம்மாள் குழந்தைகளின் இயல்பு பற்றியும், அவர்களை இஷ்டம்போல் செயல்புரிய விட்டு, விளையாட்டுப் போக்கிலேயே திருத்தும் முறைகள் பற்றியும் பேசினாள், விழா நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு மீனுவின் அம்மா ஜானி, காந்திமதி அம்மாளைச் சந்தித்தாள். துணைத் தலைவி கல்யாணியும் ஆசிரியை சாந்தாவும் உடன் இருந்தார்கள். 'உங்களை எல்லாம் சந்திக்க வேணும் என்ற எண்ணம் எனக்கு ரொம்ப நாளாக உண்டு. வேலைகள் அதிகம். அதனால் வர இயலாமல் போச்சு. மீனு எப்படி நடந்து கொள்கிறாள். படிப்பில் எப்படி என்று தெரிந்து கொள்ளணும்கிற அவா தான். என்றாள் ஜானி, 'மீனு வந்து சேர்ந்த புதுசிலேதான் ஒரு மாதிரி இருந்தாள். குறும்புத்தனமும் பிடிவாதமும் அதிகம். ஆனால், வர வர நல்ல பெண் ஆகிவிட்டாள். ஆச்சரியமான மாறுதல்தான், என்று சாந்தா தெரிவித்தாள். 'அதுக்கெல்லாம் காரணம் பத்மாதான். அவள் போக்கிரிப் பெண்ணாக இருந்து பல பெண்களின் மனசைக் கெடுத்திருக்கிறாள். நீங்கள் உங்கள் அற்புதமான பயிற்சி முறையினால் பத்மாவைத் திருத்திவிடவும், அவள் மற்றவர் களுக்கும் நல்ல முன்மாதிரி ஆகிவிட்டாள். எங்க மீனு எப்பவும் எதுக்கெடுத்தாலும் பத்மாவைத் தான் குறிப்பிடுவாள், என்று ஜானி சொன்னாள். காந்திமதி வியப்புடன் மற்றவர்களை நோக்கினாள் 'பத்மாவா? என்று கல்யாணி ஆச்சரியக் குறிப்போடு சாந்தாவைப் பார்த்தாள். சாந்தா சொன்னாள்: 'பத்மா என்று எந்தப் பெண்ணையும் மீனுக்குத் தெரியாதே! உண்மையில் பத்மா என்று யாருமே எங்கள் வகுப்பில் இல்லை.”