பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(காதலுக்குமு. $r[3Lr கடன்) 'எக்கச்சக்கமான நிலைமை’ என்பார்களே: அதன் அர்த்தம் விஸ்வநாதனுக்கு அன்று வரை சரியாகப் புரியாமல் தான் இருந்தது. அப்படி ஒரு நிலையை, அவன் அனுபவிக்க நேர்ந்த போதுதான் ஓகோ அது, இது தான் என்ற தெளிவு அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் அந்த ஞானோதயம் அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. s ( உம், சீக்கிரம் முடிவு பண்ணுங்க. சில்லறையாக இருந்தால் எடுங்க இல்லையானால் இங்கேயே இறங்கி விடுங்க” என்றார் கண்டக்டர், கண்டிப்பாக, விஸ்வநாதன் ஒரு ரூபாய் நோட்டை நீட்டி, ஒன்றரை அணா டிக்கெட் ஒன்று கேட்டான். அவன் போய் இறங்க வேண்டிய இடத்துக்கு ஒன்றரை அனாதான் கட்டணம், "சில்லறை இல்லையே!” மீண்டும் அறிவித்தான் விஸ்வம். "அதற்கு நான் என்ன ஸார், செய்கிறது? சில்லறையாக மாற்றிக் கொண்டு வந்திருக்கலாமே!" - கண்டக்டர் கேலியாகப் பேசுவதுபோல் தோன்றியது. விஸ்வநாதன் உள்ளத்தில் சூடு ஏற்பட்டது. சுடச்சுட ஏதாவது சொல்லவேண்டும் என்று பட்டது அவனுக்கு. ஆனாலும் அப்போதைய நிலைமையை உத்தேசித்து, அவன் தணிந்து போனான். இரண்டு மூன்று தடவைகள் சொல்லி தீர்த்த பிறகு, கண்டக்டர் பஸ்ஸை நிறுத்துவதற்கு உரிய மணியை