பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 • (வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் அவர்கள் பார்வையில் படாமலே மறைந்துவிட வழி இல்லையே என்று வருத்தப்பட்டான். அவனுடைய நினைப்பு அநாவசியமாக வளர்ந்து விடாமல் தடுத்து நிறுத்துவதற்காகவே வந்து சேர்ந்ததுபோல், வந்தது ஒரு பஸ். "இதில் ஒருவருக்குத்தான் இடம் இருக்கிறது. ஒருவர் தான் ஏறலாம்” என்று கண்டக்டர் தெரிவித்தார். தோழிகள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றபோது, 'விஸ்வநாதன் வேகமாகத் தாவிப் பஸ்ஸில் ஏறி, உள்ளே பிரவேசித்தான். திரும்பிப் பார்த்த போது, வத்ஸ்லாவின் பார்வை அவன் பார்வையைச் சந்தித்தது. ஐயோடீ என்று அவள் கூவியதும் அவன் காதில் விழுந்தது. கண்டக்டர் ரைட்! என்று குரல் கொடுக்கவும், பஸ் இரைந்து கொண்டு கிளம்பி ஒடத் தொடங்கியது. ஆனால் அம் மூவரின் முக தரிசனமோ, பேச்சுப் பரிமாற்றமோ அவனுக்குக் கிடைக்க வழியில்லாமல் போய்விட்டது. விஸ்வநாதனின் மனம் அமைதி பெறாமல் துடித்தது. ஒகோ' என்று கொக்கரித்தது. இந்தப் பெண்களுக்கு இருக்கிற திமிரைப் பாரேன்! என்று உறுமியது. முடிவாக அவன் தீர்மானித்தது இதுதான்; அவள் தினசரி இந்தப் பஸ்ஸில் பிரயாணம் செய்கிறவள் என்று தெரிகிறது அல்லவா? நாளைக்கே அவள் கடனை அவளிடம் கொடுத்துத் தீர்த்து விடுகிறேன். இது என்ன பிரமாதம்! ஆனால் விஷயம் அவன் நினைத்தபடி அவ்வளவு சுலபமாக முடிந்துவிடவில்லை. சட்டைப் பையில் அதிகப் படியாக ஒன்றரை யணாவை வைத்துக் கொண்டு அவன் மறுநாள் வந்தபோது, அவள் வரவில்லை. இரண்டு மூன்று பஸ்களில் எதிர்பார்த்தும் பலனில்லை. மறுநாளும் அதே கதைதான். நாலைந்து நாட்களுக்குப் பிறகு அவள் வந்தாள்.