பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 5 & வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் அவனையும் அவனது போக்கையும் புரிந்து கொள்ள முடியாத மற்றவர்கள் கைலாசம் வேலை இல்லாமல் திரிகிறான்' என்றுதான் கருதினார்கள். அவ்வித அபிப்பிராயம் கொண்டிருந்தவர்களில் நம்பியா பிள்ளையும் ஒருவர். அவர் கைலாசத்துக்கு ரொம்பவும் வேண்டியவர்.' கைலாசத்துக்கு நல்லது செய்ய விரும்பிய நம்பியா பிள்ளை அவனிடம் சொன்னார் : "நீர் சுதந்திரமாக வாழத் துணிந்திருப்பது மிகவும் அருமையான காரியம். உத்தியோகம் என்று எதையும் தேடிக் கொள்ளாமல் சுய முயற்சியினாலேயே வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கை உமக்கு இருக்கிறதே, அது மகத்தானது தான். அதற்காக நீர் பிறருக்கு உதவி புரியக்கூடாது என்ற தடை எதுவும் இல்லையே? எனக்கு வேண்டிய பையன் ஒருவன் இருக்கிறான். பள்ளிக்கூடத்தில் படிக்கிற பாடங்கள் அவன் மூளையிலே ஏறுவதாகத் தெரியவில்லை. அதனால் பிரைவேட்டாக ட்யூஷன் கற்றுக் கொடுக்கலாம் என்று பையனின் அப்பா ஆசைப்படுகிறார். அதற்கு ஏற்றவராக ஒரு ஆளைச் சிபாரிசு செய்யும்படி அவர் என்னிடம் கேட்டார். நீர் அந்தப் பையனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால் என்ன?” “பாடம் சொல்லிக் கொடுக்கவா? ஹெஹ ! எனக்கு அனுபவம் இல்லையே!” என்றான் கைலாசம். "அனுபவம் தானாக வந்து விடுகிறது! உமக்கு அறிவு இருக்கிறது. நீர் நிறையப் படித்திருக்கிறீர். அவற்றினால் அந்தப் பையனும் பயன் அடையட்டுமே. உமது சிரமத்துக் காக மாதம் பதினைந்து ரூபாய் கிடைக்கும்படி ஏற்பாடு செய்கிறேன். ஏதோ செலவுக்கு உதவும் அல்லவா?” என்றார் நம்பியா பிள்ளை. கைலாசம் யோசித்தான். அவர் சொல்வதும் நியாயம் என்று பட்டது. அந்த ஏற்பாட்டை அவனும் அங்கீகரித்தான். ஏதோ போய்ப் பார்க்கிறது. சரிப்பட்டு