பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 & | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்ததும் அவள் திரும்பி வீட்டினுள் போய்விட்டாள். ‘ஏண்டி, கூப்பிடக் கூப்பிட மதியாமல் ஓடினாயே? என்று அம்மாள்குறிப்பிட்டதும், அதைத் தொடர்ந்து குமரி பேசியதும் கைலாசத்தின் காதுகளில் விழத் தான் செய்தன. "டியூஷன் வாத்தியார் வரப் போறாரு என்றதும், பெரிய ஆளாக இருப்பாரு என்று நான் நினைத்தேன். இவரைப் பார்த்தால் வாத்தியார் மாதிரியே தோணலே. படிக்கிற பையன் மாதிரித்தான் இருக்கிறாரு பாடம் சொல்லிக் கொடுக்க வந்திருப்பவரும்!” என்று கூறிவிட்டுச் சிரித்தாள் கல்யாணி. "சரி சரி. இப்ப ஏன் இப்படிச் சிரிக்கிறே? வேலையைக் கவனி என்று உத்தரவிட்டாள் பெரியவள். கைலாசத்துக்கு அந்தப் பெண்ணிடம் கோபம் வரவில்லை. அவள் சொன்னதும் உண்மை என்றே அவன் மனம் ஆமோதித்தது. மறுநாள் கைலாசம் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அவன் வரவை எதிர்நோக்கிக் காத்திருப்பவள் போல் கல்யாணி தான் வாசல்படி மீது நின்றாள். அவள் தோற்றம் முன் தினம் போல் அழகு செய்யப்படாத அலட்சிய நிலையில் காணப்படவில்லை. சிரத்தை எடுத்துச் சிங்காரம் செய்து கொண்டிருந்தாள் அவள். அவனைக் கண்டவுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். போகிற போதே "ராமு, வாத்தியார் வந்து விட்டார்!” என்று குரல் கொடுத்துச் சென்றாள். அப்படி அவள் சொல்வதே கிண்டலாகக் குறிப்பிடுவது போல் பட்டது அவனுக்கு. - - ராமமூர்த்தி வந்ததும் கைலாசம் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். தினசரி ஒரு மணிநேரம் கற்றுக்