பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[ഒളോ * 38 கொடுக்க வேண்டும். ஆகவே, கல்யாணி தனது அழகையும் அலங்காரத்தையும் காட்டி மகிழ்வதற்கும் மகிழ்விப்பதற்கும் எவ்வளவோ சந்தர்ப்பங்களைச் சிருஷ்டித்துக் கொள்ள - κανε ά: κακ 1 ή , (R - - முடிந்தது. அவளுக்கும் பொழுது போக வேண்டும் அல்லவா! பொழுதைப் போக்குவதற்காக அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் கைலாசத்துக்கு இனிமை தரக்கூடிய செயல்களாகவே இருந்தன. அவன் ரசிக்கிறான் எனத் தெரிந்ததும் அவள் தனது செயல்களில் தீவிரம் காட்டத் துணிந்தாள். கல்யாணிக்கு வயது பதினேழு தான். அவள் செய்கிற காரியங்கள் இருபத்துநான்கு வயது வாலிபனுக்குக் கசந்தா கிடக்கும் அவளைச் சும்மா பார்த்துக்கொண்டிருப்பதே இனிமையான அனுபவம்தான் என்று நினைத்தான் கைலாசம். அவளும் வெறும் காட்சிப் பொருளாக மாத்திரமே விளங்கினாள் இல்லை. ஒவ்வொரு தினமும் ஏதாவது புதிய செயல் புரிந்து கொண்டுதான் இருந்தாள். ஒரு நாள் கைலாசத்துக்கு மனம் சரியாக இல்லை! இந்த மனம் என்பதுதான் விசித்திரமான தாயிற்றே! திடீரென்று அவனுக்கு எல்லோர் பேரிலும் வெறுப்பு ஏற்பட்டது. அந்தப் பையன் ஒரு முட்டாள். அவன் படித்து, பரீட்சையில் தேறிவிடுவான் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம். நான் அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது வீண் வேலை என்று நினைத்தான் அவன். அதனால் அன்று அவன் அந்த வீட்டுப் பக்கம் தலை காட்டவே இல்லை. மறுநாள் அவன் மனம் பேசியது: போகட்டும். இந்த மாதம் பூராவும் பாடம் சொல்லிக் கொடுத்து விடலாம். அப்பொழுதுதான் சம்பளம் கிடைக்கும். இத்தனை நாட்கள் சொல்லிக் கொடுத்து விட்டுப் பண நஷ்டம் வேறு அடைவானேன்? காலம் வீணானது போதாதா?"