பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Eggíä & 40 அவளுக்கு ஏற்படுகிறது. இந்தக் கல்யாணி மட்டும் விதி விலக்காக நடந்து கொள்ள முடியுமா என்ன? இப்படிப் பேசியது அவன் மனக்குரல். 'மரமண்டை ராமமூர்த்திக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் கைலாசத்துக்கு இஷ்டமே இல்லை. ஆனாலும் அவன் அந்த வீட்டுக்குப் போய் வருவதை நிறுத்த வேண்டும் என விரும்பவில்லை. காரணம், அங்கே கல்யாணி என்கிற காந்த சக்தி உலவிக் கொண்டிருந்ததுதான்! நான் பாடம் சொல்லிக் கொடுக்க முடியாது என்று அறிவித்து விட்டால், கல்யாணி வீணாக வருத்தப்படுவாளே, பாவம்' என்று அந்தப் பரோபகாரி தன் நெஞ்சொடு கூறிக் கொண்டான். அதனால் அவன் தினந்தோறும் அங்கே ஒழுங்காகப் போய் வந்து கொண்டிருந்தான். கல்யாணியும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தாள். சும்மா கண்காட்சியாக விளங்கி வந்தவள், அவனைக் கண்டு சிரிக்க ஆரம்பித்தாள். காரணமில்லாமல் அடிக்கடி புன்முறுவல் பூத்தாள். அவனைப் பார்த்து அவள் சிரித்த போதெல்லாம் அவனும் பதிலுக்குச் சிரித்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பிறகு அவளுக்கு அடிக்கடி சந்தேகங்கள் தோன்றத் தொடங்கின. அவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக அவள் கைலாசத்திடம் பேச்சுக் கொடுத்தாள். முதலில் அவன் நேரடியாகப் பேச முன்வரவில்லை. வேணுமென்றால் லாரிடம் கேளுடா, ராமு. நான் சொன்னது தான் சரி, தெரியுமா? என்று தொடங்குவாள் கல்யாணி, பிறகு நீங்களே சொல்லுங்கள் என்று விவாதப் பிரச்னையை விளக்குவாள். அவளுக்கு எழுகிற சந்தேகங்கள் எல்லாம் சினிமா சம்பந்தமானவையாகத் தான் இருக்கும். எந்தப் படத்தில் யார் நடித்திருக்கிறார்; இன்ன படத்தில் தோன்றிய இந்த நடிகை வேறு எந்த எந்தப் படங்களில் நடித்திருக்கிறாள்?-இந்த விதமான குழப்பங்கள் தான் அவள்