பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(சுதந்திதாக) * 42 எடுபடவில்லை. "அதனால் என்ன? நான் சொன்னதைத் தானே ஸாரும் சரி என்றாங்க. நான் தப்பு என்றால் ஸாரும் தப்பு தான்' என்று கூறித் தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள் அவள். எண்ணிப் பார்த்தால் இனிக்கும் நினைவுகளாய் விளங்கக் கூடிய இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறலாயின. எனினும் கைலாசத்தின் மனம் திடீரென்று வக்கரித்துக் கொண்டது. போதும் போதும், அந்த மட சாம்பிராணிக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துப் பாட்டைத் தொலைத்தது! என்று நினைத்து அவன் அங்கே போகாமலே நின்று விட்டான். இனி நான் வரமுடியாது’ என்று அவன் தெரிவிக்கவுமில்லை; அதுவரை சொல்லிக் கொடுத்ததற்கு உரிய பணத்தைக் கேட்டு வாங்கவும் இல்லை. அத்த வீட்டில் அ வ ைன எல்லோரும் எதிர்பார்த்தார்கள்: இரண்டு நாள், ஒருவாரம் என்று ஆகிவிட்ட பிறகுதான் சரி அவன் வரப்போவதில்லை' என்று முடிவு செய்தார்கள். நம்பியாபிள்ளையிடம் விஷயத்தைச் சொல்லி, பையனையும், உடன் அனுப்பி வைத்தார் வீட்டுத் தலைவர். "என்ன கைலாசம், இப்படிச் செய்து விட்டீர்?" என்று கேட்டார் நம்பியாபிள்ளை, "உமக்கு இஷ்டம் இல்லை ன்றால், முடியாது’ என்று சொல்லி விட்டு o ႏိုင္ပါ ன்றிருக்கலாமே” என்றும் சொன்னார். ராமமூர்த்தி "இந்தாங்க. அப்பா இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னாங்க” என்று பதினைந்து ரூபாயைக் கொடுத்தான். கைலாசம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தான்; வேண்டாம். நான் என் கடமையைச் சரியாகச் செய்ய வில்லையே. பணத்தை எப்படி வாங்கிக் கொள்வது? என்றான். ஆயினும், ராமு வலுக்கட்டாயமாகப் பணத்தை அவனிடம் கொடுத்து விட்டுப் போனான். 'உம்ம். நல்ல மனிதர்கள். நான்தான் வீணாக