பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 & | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் சொல்லிக் கொண்டு அலைந்த ஆசாமி இப்படி மாறி விட்டானே என்று சிலர் வருத்தப்பட்டார்கள். வேறு ஒருவன் சொல்லைக் கேட்டு நடக்க மாட்டேன் என்று தானே தோழர் சொன்னார்? அதில் அவர் மாறிவிட வில்லையே. இப்பொழுதெல்லாம் அவர் வேறு ஒருத்தியின் சொல்லைத் தானே கேட்டு நடக்கிறார்!’ என்று சிலர் கேலி பேசி மகிழ்ந்தார்கள். 'கைலாசத்துக்கு சுதந்திர உணர்வு தாகம் போல் வந்தது. தாகத்தை தணிக்கும் குளிர்ந்த நீர்போல் வாய்த்தாள் கல்யாணி. ஆகவே தோழருக்குத் திருப்தி ஏற்பட்டு விட்டது! என்று ஒருவர் குறிப்பிட்டார். நம்பியாபிள்ளை எல்லோரது பேச்சையும் கேட்டுச் சிரித்தபடி வாழ்ந்தார். அனுபவ ஞானம் பெற்றவர் அவர். 'மனித வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தான். இளம் பிராயம் துடிப்பு மிகுந்தது. உணர்ச்சி வசப்பட்டவர்கள் துடுக்காகச் செயல் புரிந்து தாங்களும் கெட்டு, தங்கள் செயலால் பிறரையும் சமூகத்தையும் பாதிக்காமல் தடுப்பதற்கு நமது பெரியவர்கள் கண்ட வழிதானே கல்யாணம் என்பது ? வாலிபனுக்குத் துணையாக ஒரு குமரியைச் சேர்த்து வைத்து விட்டால், இரண்டு பேரும் கூடி வாழ்க்கை என்பது என்ன என்று உணர்ந்து விட்டுப் போகிறார்கள் ? என்று அவர் மனம் பேசியது. షేS