பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 48 (பேசவில்லை | சாதாரணமாகப் பார்த்து அறிமுகம் செய்துகொண்ட அவனுக்கு அவள் மீது ஒரு பிரியம் ஏற்பட்டது. அவள் உள்ளத்தில் தன்னுடைய நினைவு நீங்காது நிலைத்து விட்டது என்பதை சிவராமன் காலப்போக்கிலே உணர முடிந்தது. அவனும் அவளைப் பற்றி நினைக்கலானான்: கனவில் கண்டு களித்தான். மனதிலே பயிராகும் காதல் நன்றாக வளர்ந்து செழிப்புற வகை செய்யும் ஜீவசத்து நினைப்புத்தானே? வசந்தாவைப் பற்றிய நினைப்பு சிவராமனுக்கு ஏக்கத்தைக் கொடுத்தது. அவன் அவளை சந்திக்க வேண்டும் என்று அசைப்பட்டான். சிவராமன் தனது ஆசைகளுக்கு உருவம் கொடுத்து, உணர்ச்சிகளை உயிர்த் துடிப்பு மிகுந்த எழுத்துக்களாக்கிக் கடிதங்கள் எழுதினான். அவளுடன் பழகுவதற்குக் கிட்டக் கூடிய வாய்ப்புக்களைப் பற்றி எல்லாம் சுவை பட எழுதினான். வசந்தா வருகிறாள். மகிழ்வினால் மலர்ந்த முகத்தில் நானத்தின் செம்மை அழகு கூட்ட அவள் நிற்கிறாள். சிரிக்கிறாள். அவன் என்னவோ கேட்க அவள் ஏதோ சொல்லுகிறாள். வசந்து நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு என்னவோ சொல்லுகிறாயே?’ என்று கேட்டு அவன் அவளது கை விரல்களிடையே கிடந்து அவதியுறும் பின்னல் சடையைப் பிடித்து இழுக்கிறான். அவள் கோபிப்பது போல் சில சொற்கள் பேச, அவன் கேலியாக வார்த்தையாட. இப்படி இப்படி மேலே மேலே வளருகிறது ரசமான சம்பாஷணை. - இந்த விதமாக சிவராமனின் உள்ளம் ஒத்திகை நடத்தி அப்ரூவ் செய்து மகிழ்ந்த காதல் நாடகங்கள் எத்தனை எத்தனையோ! - வசந்தாவின் மனம் மாத்திரம் சும்மாவா கிடந்தது?