பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 & ಮಿಣುಹ6TಣTಣಗೌFDಾಹTಣ5ಣgst அவளும் அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள். அவன் கடிதங்களுக்கு பதில் எழுதினாள். கனவுகளை வளர்த்தாள். . . . . * . . . . சிவராமனைச் சந்திக்கும் போது இன்னின்ன பேச வேண்டும், என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்றெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்து வந்தாள். அவளுடைய எண்ண ஓட்டம் அவளுக்கே சிரிப்பு எழுப்பி விடும். அவள் தானாகவே சிரித்துக் கொள்வாள். உடனடியாக அவள் தன்னையே கண்டித்துக் கொள்வதும் உண்டு. காதல் தன்னை பித்தியிலும் பித்தி பெரும்பித்தி ஆக மாற்றி விட்டது எனவும் அவள் நினைப்பது வழக்கம். இந்தக் காதல் என்கிற தத்துவம்தான் மனித உள்ளத்தை என்ன பாடுபடுத்தி விடுகிறது! ஆண்ையும் பெண்ணையும் எப்படியெல்லாம்தான் ஆட்டி அலைக்கழித்து விடுகிறது! காதல் வசப் பட்ட சிவராமனும் வசந்தாவும் விதிவிலக்குகளாக விளங்கிவிட முடியுமா என்ன் திடீரென்று ஒருநாள் அவனும் அவளும் சந்திக்க நேர்ந்தது. , , ; , , , , , , . . -- - । . । . । . । எந்தச் சந்திப்புக்காக இரண்டு உள்ளங்களும் ஏங்கிக் கிடந்தனவோ அந்தச் சந்திப்பு தானாகவே ஏற்பட்டது. அவளைக் கண்டதும் அவன் எவ்வளவோ பேச வேண்டும் என்று எண்ணி இருந்தும், அவனிடம் என்ன என்னவோ சொல்ல வேணும் என அவள் திட்ட மிட்டிருந்தாலும் அனுபவ சாத்தியமாகி இருக்க வேண்டும்நியாயமாகப் பார்த்தால்! ஆனால், நடந்தது வேறு விதம் தான். காதல் மிகுதியும் பெற்றிருந்த வசந்தா காதலனைக் கண்டதும் மிக அதிகமான வெட்கம் கொண்டு விட்டாள். கூச்சம் என்பது குறுக்கே வந்து விழுந்தது ஒரு திரையாக