பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசவில்லை | & 50 அவள் அவனைப் பார்த்தாள். பிறகு பாராதது போல் பார்வையை அங்குமிங்கும் ஒட்டினாள். தரையைப் பார்த்தாள். தானாகவே சிரித்துக் கொண்டாள். அவன் அவளிடம் என்ன வசந்தா செளக்கியம் தானா? என்று கேட்டான். பேசாமடந்தை ஆகி நின்ற காதலியிடம் எப்படி பேச்சைத் தொடர்வது என்று புரியாமல் திகைத்தான். ஆகவே அவனும் பேசவில்லை! அதுதான் அவர்களுடைய முதல் சந்திப்பு-காதலன் காதலி என்ற தன்மையில் பேசிப் பேசி இன்பம் பெற எண்ணிய இளம் உள்ளங்கள் பேசாமல்-பேச முடியாமல்திணறும்படி நேர்ந்தது எதனால்? மனித சுபாவமே அப்படிப் பட்டதுதானா? காதல் செய்கிற வேலைகளில் அதுவும் ஒன்றுதானா? அவ்விதமும் இருக்கலாம்! கண்ணும் கண்ணும் ஒன்று பட்டு களிப்பு அடைகிறபோது, பேச்சுக்கு அவசியம் ஏதாவது உண்டா என்ன? வாய்ச் சொற்கள் என்ன பயனுமில:-இதுதானே காதல் உண்மை : ஆனால் சிவராமனுக்கு அது திருப்தி அளிக்கவில்லை. பிரிந்து சென்ற வசந்தாவுக்கும் கூடத்தான்! இது முதல் சந்திப்பு தானே! அடுத்த சந்திப்பின் போது வட்டியும் முதலுமாகச் சேர்த்து வைத்துப் பேசித் தீர்த்து விடலாம் என்றுதான் அவனும் அவளும் தனித்தனியாகத் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டார்கள். ஆமாம் ஐயா, காதல் என்கிற மாயம் செய்கிற விளையாட்டுதான் இதெல்லாம்! క్ష్వి