பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[ജക്ടേ?- ఇ; 54 "மெய்தான், மெடல் கேட்க யாரும் வரலே. ஆனால் உன் கோழிதான் இங்கே வந்து செடிகளை எல்லாம் பாழாக்கிப் போடுது. தோட்டத்தையே கொத்திக் கிளறி நாசமாக்கி விடுது. நானும் எத்தனையோ தடவை சொல்லி யாச்சு. இதுதான் கடைசித் தடவை. இன்னொரு முறை அந்தக் கோழி இந்தப் பக்கம் வந்துதோ..." “வந்தால் என்ன செய்து போடுவியாம்! அப்படியே பொசுக்கி விடுவியோ" என்று எக்காளமாகக் கேட்டாள் அவன். "அது என்ன செய்வோனோ, இப்ப என்னாலே சொல்ல முடியாது" என்று முருகையா அறிவித்தான். "நீ பெரிய சூரப் புலியின்னு ஊரு பூராவும் ஒரே பேச்சாகக் கிடந்துதே; அது சரிதான் போலிருக்கு!” என்று நையாண்டி பண்ணிச் சிரித்தாள் அவள், "அது என்னமோ! நான் சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு. அப்புறம் உன் கோழிக்கு ஏதாவது வந்து விட்டது என்று என்னைக் குறை கூறவேண்டாம்” என எச்சரித்தான் அவன். "அப்ப பார்த்துக்கிடுவோம். எங்க கையி என்ன புளியங்கா பறிக்கவா போயிருக்கும் அந்தச் சமயத்திலே? அதையும் நீ மறந்து விடாதே!" என்று அகந்தையோடு சொல்லிவிட்டு நடந்தாள் செல்லம். திரும்பிப் பாராமலே கர்வமாக வீட்டினுள் மறைந்தாள். - அவள் போகும் அழகை வைத்த கண் வாங்காமல் கவனித்து நின்ற முருகையா நெடுமூச் செறிந்தான். "முரடு, பிடிவாதம், கர்வம் எல்லாம் தலைக்கு ஏறிப் போயிருக்குது" என்று முனு முணுத்துக் கொண்டான். அவனை வம்புச் சண்டைக்கு இழுப்பது போல் ஒலித்தது கொக்கரக்கோ! எனும் கூவல். தோட்டத்துச் சுவர் மீது நின்ற சேவல் கழுத்தை நீட்டி நெளித்து மறுபடியும்