பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 & |வல்லிக்கண்ணனின் ைெதகள்) அவன் உள்ளத்தில் ஒரு ஆசை எப்படியோ விழுந்திருந்தது. அது முளைவிட்டு வளர்ந்து மெதுவாகக் குருத்து வீசிக் கொண்டும் இருந்தது. ஜோரான சேவல் ஒன்று வளர்க்கணும். மூக்கத் தேவரின் சேவலோடு போட்டியிட்டு அதைத் தோற்கடிக்கும்படி தேர்ச்சி பெற வைக்கனும் கோழிச் சண்டையின்னு ஊரைத் திரட்டி தேவரு சேவலை மட்டம் தட்ட வேணும். அப்பதான் தேவரும் சரிப்படுவாரு தேவர் மகள் ராங்கியும் கொஞ்சம் குறையும் என்று நினைத்து வந்தான் அவன். நல்ல ஜாதிச் சேவல் கிடைத்தது. அவனுக்கு. அதை நன்றாகப் பழக்கி, சண்டையிடுவதற்குத் தயார்ப்படுத்தும் பொறுப்பை அவன் அனுபவமுள்ள ஒருவரிடம் ஒப்படைத்து விட்டான். மூக்கத் தேவரே அதிர்ச்சி அடையும்படி செயல்புரியப் போகிற நாளை எண்ணி எண்ணி முருகையா தனக்குத் தானே மகிழ்ந்து போவது வழக்கமாகி விட்டது. அத்தகைய சந்தர்ப்பம் ஒன்றின் போது தான் "ஐயா, தேவரு மகனே! இது உம்ம வேலை தானா!" என்ற கடுஞ்சொல் பாணம் பக்கத்து வீட்டிலிருந்து வந்து அவனைத் தாக்கியது. திரும்பிப் பார்த்த அவன் நோக்கிலே, செல்லத்தின் கோப சொரூபம் தென்பட்டது. “என்ன, TETT சங்கதி!” என்று சாவதானமாக விசாரித்தான் முருகையா. செல்லத்துக்குப் பற்றி எறிந்தது! “உம்மைக் கொண்டு போயி உடைப்பிலே போடுகிற சங்கதி" என்று உறுமினாள் "பத்திரகாளிக்கு இப்ப பசி வேளை போலிருக்கு! ஏன், இன்னும் சாப்பிடலியாக்கும்!” என்று எகத்தாளமாகப் பேசினான் அவன். "சாப்பிடாமல் இருந்தால் நீ தான் சோறு போடப்