பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கையும் மனித இயல்புகளும், மனித மனசின் இயங்குதல்களும் இயக்குதல்களும் எனக்கு எப்பவுமே ரசமான விஷயங்களாக விளங்கி வந்துள்ளன. என் மனம் கற்பனைச் சாயம் ஏற்றி அவற்றை கதைகளாகப் பதிவு செய்யத் தூண்டி வந்திருக்கிறது. அப்படி நான் கண்ட கேட்ட உணர்ந்த, கற்பனை செய்த விஷயங்களைக் கொண்டு பலநூறு சிறுகதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் பெரும் பாலானவை மனசின் சித்துவிளையாடல்களை, குரங்குச் சேட்டைகளை. குரூரங்களை, சிறுபிள்ளைத்தனங்களை, தனித்தன்மைகளை எடுத்துக்காட்டக் கூடியவையே. அவற்றில் சில கதைகளே இத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. மனித மனசின் விந்தைத் தன்மைகளையும் விசேஷச் செயல்பாடுகளையும் விபரீதப் போக்குகளையும் இக் கதைகள் சித்திரிக்கின்றன. குழந்தைப் பிராயத்திலிருந்தே மனம் தன் சக்தியை மனிதர் மீது செலுத்துகிறது. அதன் தாக்கங்களை குழந்தைகளின்-சிறுவர் சிறுமியரின்-சகல செயல்களிலும் காணமுடியும். குழந்தைகளின் மனம் சதா குறுகுறுத்துக் கொண்டேயிருக்கிறது. துருதுருவென ஒடி ஆடி குறும்புகள் செய்து பெரியவர்களை அலைக்கழிக்கிற குழந்தைகள் தொல்லைகளாகத் தென்படுகிறார்கள். அறிவுக் கூர்மையும் கற்பனைத் திறனும் அதிகம் பெற்றிருக்கும் குழந்தைகள் விசித்திரமாகவும் வேடிக் கையாகவும்-விபரீதமாகவும் கூட - செயலாற்றுவது இயல்பாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு குழந்தையை மீனுக்குட்டி கதை அறிமுகம் செய்கிறது. மீனுக்குட்டி நல்ல சிறுமி தான். ஆனால் அவள் கற்பனைத் திறம் அதிகம் பெற்றிருந்தாள். வாழ்க்கையின் அன்றாடச் சாரமற்ற தன்மையைப் போக்கி சுவையும் வர்ணமும் சேர்ப்பதற்காக மீனு தன் கற்பனா சக்தியை தாராளமாகப் பயன்படுத்தும்படி அவள் மனம் அவளைத் தூண்டி இயக்கியது. அது இதர குழந்தைகளுக்கு தொல்லை தருவதாக அமைந்து விட்டது. - போக்கிரிக் குழந்தை பத்மா அறிவுக் கூர்மை பெற்றவள். கதை