பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டைக்கோழி & 60 பாத்திரங்கள் உருளுவதும், பாட்டு என்ற பெயரில் கத்தல் கிளம்புவதும் சகஜமாகிவிடும். செல்வத்துக்குத் தாயார் இல்லை. தகப்பன் அவள் விவகாரங்களில் தலையிடுவதே இல்லை. பக்கத்து வீட்டில் முருகையா தனியாக வசித்து வந்தது அவள் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்ததோ என்னவோ! ஒருநாள் செல்லம் திடீரென்று குரல் கொடுத்தாள். "ஊரிலே உலகத்திலே அதிசயமெல்லாம் நடக்கத்தான் செய்யுது. அம்மா! கோழி என்றாலே சே-சூ என்று விரட்டுகிறவங்க கூடக் கோழி வளர்க்க ஆரம்பித்தாச்சு. அப்புறம் என்னத்தைச் சொல்ல' என்று மொழிந்தான் அவள், முருகையாவின் காதுகளில் விழும்படியாகத்தான். காரணம், முருகையா நன்கு வளர்ந்து மொழு மொழுவென மிளிர்ந்த சேவல் ஒன்றை வைத்து ரஸித்து மகிழ்ந்து கொண்டிருந்தது தான். செல்லத்தின் பேச்சு காதில் பட்ட உடனே அவன் பெருமையோடு திரும்பி அவளை நோக்கினான். 'உனக்குக் கோழிகளைப் பற்றி நிறையவே தெரிஞ்சிருக்குமே. இந்தச் சேவல் எப்படி இருக்குது, சொல்லு!" என்றான் அவன். 'நல் லாத்தான் இருக்குது. அதுக்கென்ன ! கொண்டையும் வாலும் அழகாக." என்று இழுத்தாள் செல்லம், "அழகு என்ன அழகு! இதனுடைய வீரம் இருக்குதே, அதைப் பார்த்து இந்த ஊரே பிரமிக்கப் போகுது, தெரியுமா!" என்று கர்வமாகச் சொன்னான் முருகையா. "அடி ஆத்தே!” என்று கூவி, கையை நீட்டி வளைத்து, ஒரு விரலைமோவாய் மீது வைத்து நின்றாள் செல்லம். ஒரு "இன்னும் மூன்று நாளுக்குப் பிறகு, நீ மட்டும் என்ன?