பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சண்டைக்கோழி * 62 அது எத்தனையோ சண்டைகளைப் பார்த்திருக்கிறதே?" “முருகையா சேவல் ஜம்னு இருக்குது. அது நிச்சயமா ஜெயித்தே தீரும்" என்று வாதப் பிரதிவாதங்கள் கிளம்பின. இதற்காகத் தங்களுக்குள் பந்தயம் வைத்துக் கொண்டவர்கள் அநேகர். சண்டை நடக்க வேண்டிய தினத்துக்கு இன்னும் இரண்டே இரண்டு நாட்கள்தான் இருந்தன. முருகையாவும் அவன் தோழர்களும் சேவலைக் கவனித்த கவனிப்புக்கு ஈடே கிடையாது. அவர்கள் செய்த காரியங் களையும், பேசிக் கொண்ட அகம்பாவப் பேச்சுக்களையும், சிரித்த சிரிப்பையும் கவனித்துக் கவனித்துப் பொருமிக் கொண்டிருந்தாள் செல்லம், “இது வேண்டாம். வீண் பழிக்குத் தான் இடம் ஏற்படும்' என்று முருகையாவிடம் சொல்ல ஆசைப்பட்டாள் அவள், அப்புறம் "நாம் சொல்லி அது கேட்கவா போகுது!’ என்று நினைத்து விட்டாள். முருகையாவையும் சேவலையும் கண்காணிக்கிற செயலை மாத்திரம் அவள் விட்டு விடவில்லை. "ஏ, அம்மாப் பொண்ணு! நீ கண்ணுவச்சு என் சேவலு படுத்து விடும்போல் இருக்குதே!” என்று ஒரு தடவை முருகையா சொன்னான். அவள் மூஞ்சியைச் சுளித்து 'வவ்வவ்வே' என்றாளே தவிர, ஏசிப் பேசவில்லை. சண்டைக்கு முந்திய நாள் இரவிலே வெகு நேரம் வரை செல்லம் தோட்டத்துப் பக்கம் காணப்பட்டாள். "என்ன செல்லம், ஏன் இங்கே நிக்கிறே?" என்று கேட்டான் முருகையா, “நின்னா உனக்கென்னவாம்? உன் காலா வலிக்கப் போகுது' என்று எரிந்து விழுந்தாள் அவள். - மறுநாள் அதிகாலையில் செல்லம் முருகையாவின் தோட்டத்துப் பக்கமிருந்து தாவிச் செல்வதை அவன் கண்டான். "இங்கே எங்கே வந்து விட்டுப் போறே? ஏன்