பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 哆 | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் சுவர் ஏறிக் குதிச்சே ' என்று விளையாட்டாக அதட்டினான் அவன். 'அட, அதிகாரத்தைப் பாரேன் !' என்று அலட்சியமாகச் சொன்னாள் செல்லம், "இங்கே காயப் போட்டிருந்த துணி ஒண்னு அந்தப் பக்கம் விழுந்து விட்டது. அதை எடுக்க வந்தேன்” என்று விளக்கம் கூறிவிட்டு ஓடிப்போனாள். - அன்று இரவு நேரத்துக்குப் பாதுகாப்பாக தோட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்த மாட்டுத் தொழுவத்தில், பெரிய மரக் கூண்டில் சேவல், விடப்பட்டிருந்தது. முன் பக்கம் கம்பிகள் போடப்பட்ட கதவு இருந்தது. சேவல் வெளியே பார்ப்பதற்கும் வெளியே நிற்பவர்கள் சேவலைப் பார்ப்பதற்கும் வசதியாக இருந்தது. முருகையா சேவலைப் பார்ப்பதற்காக வந்தான். காலடிச் சத்தம் கேட்டு, எழுந்து நின்ற சேவல் இறக்கைகளைப் படபடத்துக் கொண்டது. கம்பிகளோடு ஒட்டி நின்று கழுத்தை நீட்டிப் பார்த்தது. "க்ளக்-க்ளக்” என்று அடித் தொண்டையில் ஒலி செய்யும் குரல் கொடுத்தது. பிறகு ஒடுங்கிப் போய் கூண்டினுள் சென்று, மூலையில் உட்கார்ந்துவிட்டது. "என்னடா வேலா என்ன ? இன்னிக்கு எப்படி இருக்கிறே?" என்று கேட்டான் முருகையா. இதனுடைய தோற்றத்திலும் செயல்களிலும் முன் தினத்து முறுக்கும் சுதாரிப்பும் இல்லைபோல் தோணுதே என்று எண்ணிக் கொண்டான் அவன். எனினும், அவன் அதைப் பெரிதாக எண்ணவில்லை. - மூக்கத் தேவர் முன முணத்துக் கொண்டு தானிருந்தார். "நேற்றுப் பிறந்த பய நம்ம சேவலை தோற்கடிக்கனும்கிற ஆசை அவனுக்கு வந்திருக்குது, பாரு மேன், நம்ம பக்கத்து வீட்டிலே இருக்கிற பயலுக்கு இப்படி ஒரு எண்ணம் எப்படி வந்தது? அதல்லவா நமக்குப் புரியலே!" என்ற நினைப்பு அவர் மனத்தை உறுத்திக்