பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 : (வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்) மாதர் புடவைகள், அனைத்தையும் விசாலப்பார்வையில் விழுங்கிய கண்கள் உள்ளத்தில் மீட்டிய உவகை கீதம் அது என்பதை எத்தனைபேர் புரிந்து கொள்ளச் சித்தமாக இருப்பார்கள்? வெயில் அழகாக இருக்கிறதாம்! மடையன்! சரியான மடச் சிகாமணி இவன். இந்த வெயிலில் இவன் மூளையும் இளகி நிற்கிறது போலும் !" என்று தானே எண்ணுவார்கள்? அப்படிச் சொல்லக் கூடியவர்களுக்காக அனுதாபமே கொள்வார் அவர். 'மலரினில், நீலவானில், மாதரசர் முகத்திலெல்லாம் அழகினை வைத்தான் ஈசன் எவனோ ஒரு ஓவியன் காண்பதற்காக என்று ஒரு மகாகவி பாடி யிருக்கிறார். அந்தக் கலைஞன் மட்டும் தான் ரசிக்க வேண்டுமென்பதில்லை. கண்ணும் மனமும் காலமும் பெற்ற எவரும் ரசித்து மகிழலாம், கிருஷ்ணபிள்ளை இம் மூன்றையும் பெற்ற பாக்கியசாலியாக்கும் என்று கிருஷ்ண பிள்ளையே உற்சாகமாகச் சொல்லுவார். கவிஞர்கள் பிறருக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும் காரியங்களைச் செய்வதில் ஆர்வம் உடையவர்கள் என்று சொல்லப்படுவது உண்டு. கிருஷ்ண பிள்ளை வாழும் கவிஞர் என்பதை அவரது செயல்கள் நிரூபிக்கும். பொதுவாகப் பலரும் மாலை நேரங்களில் முன்னிரவில், கடற்கரை செல்வார்கள். பிள்ளையோ காய்கதிர்ச் செல்வன் அனல் அள்ளிச் சொரிந்து கொண்டிருக்கும் பட்டப் பகலில் "பீச்சுக்குப் போய் சுடுமணலைக் கடந்து, ஐஸ் மாதிரி ஜில்லென்று இருக்கும் அலை நீரில் நின்று களிப்பார். சாயங்காலம் அறை தேடி வந்து முடங்கிக் கிடப்பார். மழை 'சோ' என்று பிடித்து விளாசும்போது, கடல் மணலில் ஹாயாக உலாவிக்கொண்டிருப்பார். எதையாவது பார்த்து விட்டு, அல்லது எண்ணிக்கொண்டு, ஆகா, இந்த நேரத்தில் நான் உயிரோடிருப்பதற்காக நான் மிகவும் ஆனந்திக்கிறேன். ஆகா, வாழ்வது அதிர்ஷ்டமான விஷயம் தான் என்பார்.