பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை வாழ்வு & 78 கதைகளைப் பற்றி உரையாட முன்வந்தாள். பின், வம்பாடுவதில் உற்சாகம் காட்டினாள். திடீரென்று ஒருநாள் டம்ளரும் கையுமாக அழகு நடை நடந்து வந்தாள். 'இப்ப நான் என்ன கொண்டு வரேனாம் என்று குழைவுக் குரலில் இழுத்தாள். - 'எனக்கெப்படித் தெரியும்? ஃபஸ்ட்கிளாஸ் காப்பியாக இருந்தால் ரொம்ப நன்றி சொல்வேன் என்றேன். வேறு எதுவாகவாவது இருந்தால் சாப்பிட மாட்டீர்களா? என்றாள் அவள் அவள் முகத்தில் சிறிது வாட்டம் படர்ந்தது. உங்களுக்குப் பாயசம் பிடிக்காது? என்று தயங்கியபடியே கேட்டாள். பேஷாகப் பிடிக்குமே!’ இன்று எங்கள் வீட்டில் விசேஷம். இந்தப் பாயசம் நானே தயாரித்ததாக்கும் என்று உமா டம்ளரை நீட்டினாள். நான் பருகி முடிக்கும்வரை பார்த்தபடி நின்று விட்டு, ‘எப்படி இருக்கிறது என்று ஆவலோடு கேட்டாள். 'உன்னைப் போல் இருக்கிறது-ஜோராக, உன் பேச்சைப் போல் இனிக்கக் கிடக்குது என்றேன். ஐயே மூஞ்சி என்று சொல்லி, டம்ளரைப்பிடுங்கிக் கொண்டு ஓடினாள். அவளுக்குக் கோபம் இல்லை. ஆனந்தம் தான் என்பதை அவள் முக மலர்ச்சியும், துள்ளலும் குதிப்பும் காட்டிக் கொடுத்தன. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாய் இது வளர்ந்து வந்தது. அடிக்கடி காப்பி, கேசரி, பாயசம் என்று எதையாவது எடுத்து வந்து, 'நான் செய்ததாக்கும். நான் செய்தேன்’ என்று விநியோகம் பண்ணுவாள். என் புகழ்ச்சியை ஆவலோடு எதிர்ப்பார்ப்பாள். நாளடைவில் அவள் ஒரு தொல்லையாகவே மாறிவிட்டாள். ஓயாமல் என்ன படிப்பு? நான் தலையைக் காட்டியதுமே புத்தகத்தை