பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f * . |கவிதை வாழ்வு- & 80 முறைத்து நோக்கினாள். அதற்காக இப்படித்தான் பேய் மாதிரி அறையணுமோ? சாந்தமாகச் சொல்றது! என்று முனகி விட்டு வெளியேறிவிட்டாள். கிழிபட்ட புத்தகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபமும் ஆத்திரமும் இருந்த போதிலும், அறிவு தன் குரலைக் காட்டலாயிற்று. அவளை நான் அடித்தது தப்பு. கை நீட்டி அடித்திருக்கக் கூடாது. அந்நியளான ஒரு பெண்ணைத் தொட்டு அடிப்பது என்றால் மற்றவர்கள் என்ன சொல்ல மாட்டார்கள் ' என்றெல்லாம் என் எண்ணமே என்னைச் சுட்டது. அதனால் மனக் குழப்பமும் வேதனையும் ஏற்பட்டன. எனக்கு வேறு வேலையே ஓடவில்லை. அவளே நினைவாகி என் உள்ளத்தை நிறைத்து நின்றாள். அவள் திரும்பவும் வந்ததும் அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அவள் பிறகு அன்று முழுதும் எட்டிப் பார்க்கவே யில்லை. மறு நாளும் உமா வரவில்லை, அடிக்கடி வந்து, விளையாட்டுகள் காட்டி, இனிக்க இனிக்கப் பேசும் யுவதி வராமல் நின்றுவிட்ட பிறகே, அவள் என் பொழுதை எப்படி பொன் மயமாக்கிக் கொண்டிருந்தாள் என்பது புரிந்தது. அவள் வராததனால் வெறுமையாகி விட்ட காலம் சுமையாய்க் கனத்துத் தொங்கியதாகத் தோன்றியது. உமா நீ இனிமேல் வரவே மாட்டாயா!' என்று ஏங்கியது என் மறுநாள் அவள் வந்தாள்-இருட்டறையில் புகும் ஒளிபோல, ஒளி வெள்ளத்தில் மினு மினுக்கும் எழில் மலர்போல் திகழ்ந்தாள் அவள் என் உள்ளத்தைத் தாக்குகின்ற ஒரு படையெடுப்பு மாதிரி வந்து, அசைந்தபடி, செயல் புரிந்த உமாவின் பார்வையும் சிரிப்பும் அசைவும் நெளிவும் என்னைக் கிளர்ச்சியுறச் செய்தன. உமா, என்னை மன்னித்து விடு என்றேன். மன்னித்தோம் என்று ஒரு ராணியின் மிடுக்கோடு அவள் சொன்னாள். அருவியெனச்