பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 必 | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்) சிரிப்பை அள்ளித் தெளித்தாள். பிறகு, இயல்பான சுபாவத்தோடு பேச்சை எங்கெங்கோ திருப்பி விட்டாள். அவளுக்கு என் மீது அளவற்ற அன்பு என்று எனக்குப் புரிந்து விட்டது. எனக்கு அவளிடம் ஆசை ஏற்பட்டிருந்தது. அவளைக் காண முடியாத நாளெல்லாம் பலனற்ற நாளே என்றும் பட்டது. என் வாழ்வைப் பயனுள்ளதாக, இனிமை நிறைந்ததாக மாற்றுவதற்கு அவள் என் துணைவியாக வேண்டும் என்று என் மனம் ஜபம் புரியத் தொடங்கியது. அவளுக்கும் அந்த ஆசை இருந்தது. அதை நான் சிறிது சிறிதாக உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு நாள் αιοπ ஒய்யாரமாக வந்து நின்றாள். இன்று என்னிடம் என்ன புதுமை சேர்ந்திருக்கிறது, சொல்லுங்கள் பார்க்கலாம் என்றாள். நான் அவளை மேலும் கீழுமாக நோக்கினேன். எனது தாமதத்தையும் மெளனத்தையும் பொறுக்க முடியாதவளாய் அவள் கத்தினாள். ஏ மக்கு! கண்ணு கூடத் தெரியலியா என்ன? என்று கேட்டு, அவள் விரலால் கழுத்தைச் சுட்டினாள். மாம்பிஞ்சுகளைக் கோத்து ஆரமாக்கியது போன்ற இந்தச் சங்கிலி அவள் கழுத்தைச் சுற்றி மின்னி அழகு செய்தது. என் கண்கள் மகிழ்வின் சுடரொளி காட்டின ஆகா, ரொம்ப அழகாக இருக்கிறது, உமா, ஜம்மென்று, ஜோராக இருக்கு என்று பாராட்டினேன். அவளுக்கு மகிழ்ச்சியாவது மகிழ்ச்சி! நீருற்றுப் போல் பொங்கிப் பொங்கி வழிந்தது குதூகலம். அவளே கும்மாளமிட்டுக் குதிகுதி என்று குதித்தாள். ஆடிப் பாடினாள். அந்த உற்சாகத்தில் அவள் என்னவோ சேட்டை செய்யவும் எனக்கு எரிச்சல் வந்தது. என் ஆத்திரத்தை தூண்டி ஆனந்தம் அடைய விரும்பியவளாய் அவள் மேலும் விஷமம் செய்தாள். நான் அவள் தலைப் பின்னலைப் பிடித்து இழுத்து. மண்டையில் நறுக்கென்று - ஓங்கிக் குட்டுவதற்காகக் கை வீசினேன். அவள் இரட்டைப் பின்னல்போட்டு, ஒன்றைக் கழுத்தின் பக்கமாக முன்னே துவள விட்டிருந்தாள். வேகத்தில் என் கை கழுத்துச்