பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை வாழ்வு & 82 سسسسسسسسسسسسسسسسسهٔ சங்கிலியையும் சேர்த்து இழுத்துவிட்டது. சங்கிலி அறுந்து போயிற்று. இதை நானோ, அவளோ எதிர்பார்க்கவில்லை. முழுதலாந்த பெரிய புஷ்பம் போல் களி துலங்கப் பளிச்சிட். அவள் முகம் அனலில் சுடப் பெற்ற கத்திரிக்காய மாதிரிச் சுருங்கிக் கறுத்தது. அவள் கண்களில் நீர் வழிந்தது. உதடுகள் துடித்தன. என் சங்கிலியை அறுத்து விட்டீர்களே. அம்மாவிடம் நான் என்ன சொல்வேன்? என்று துயரத்தோடு முணுமுணுத்தாள் உமா. என் புத்தகத்தை அவள் கிழித்துவிட்டாள் என்று நான் அடைந்த கோபமும் வெறியும் என் நினைவில் மின்வெட்டின. அவள் இப்போது சீறிப் பாய்ந்திருக்கலாம். வெகுண்டு ஏசியிருக்கலாம். வெறியோடு எதையாவது எடுத்து என் மூஞ்சியில் வீசி அடித்திருக்கலாமே. அவள் அவ் வேளையில் எது செய்தாலும் அது நியாயமாகத் தான் இருந்திருக்கும். ஆனால் அவளோ வேதனையால் குமைந்து குமுறினாள். கண்ணிர் வடித்தபடியே வெளியேறினாள். அறுந்த சங்கிலியை எடுத்துச் செல்லவுமில்லை. விதி என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது மனிதர் வாழ்க்கையில் குறுக்கிட்டு விளையாடுவதில் அதிக உற்சாகம் காட்டுகிறது என்றும் தோன்றுகிறது. நமக்குப் புரியாத-நம்மால் புரிந்துகொள்ள முடியாத-பல விஷயங் களுக்கு நாம் இப்படித்தான் சமாதானம் கூறிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உமாவை என் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட வைத்த விதி குரூரமாக விளையாடி விட்டது என்றே சொல்ல வேண்டும். சங்கிலியை வாங்கிக்கொள்ள உமா வருவாள் என்று நான் எண்ணியிருந்தேன். மறுநாள் அவள் வீடு பட்டிக் கிடக்கக் கண்டேன். உமாவும் அவளது பெற்றோரும் அயலூர் எங்கோ போயிருப்பதாகத் தெரிந்தது. அவள் திரும்பி வருவதற்குள் சங்கிலியை ஓர். ஆசர்ரியிடம்